பொன்பூத்த மலர்பூத்த புகழ்பூத்த விதிபூத்த புவனமெல்லாம் மன்பூத்த சூர்பூத்த வலிபூத்த அயில்பூத்த வரதன் பூத்த தென்பூத்த அருள்பூத்துத் தேன் பூத்த தமிழ்பூத்துத் திசைகளெங்கும், இன்பூத்த இசைபூத்து எழில்பூத்த குறுமுனி தாள் இறைஞ்சி வாழ்வாம்.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்தியிருந்த அருந்தவரனைவரும் அமர்த்து சூழ இப் பெருந்தகையாளர் தமனிப நிலையில் முதலில் சிறந்து வீற்றிருந்தார். புனிதராகிப முனிவர் குழாத்துள் இளஞ்சூரியன்போல் இம் முனிவர் பெருமான் இனிது திகழ்ந்தார். வேண்டிய கலைகளை இவர்பால் விளங்க உணர்ந்து அவர் உளங்களி கூர்ந்தார். நாளடைவில் உம்பரும் இம்பரும் உவந்துபோற்ற இவர் உயர்ந்து விளங்கினார். இங்ஙனம் இவர் விளங்கி வருங்கால் உலகம் இன்புற இறைவன் திருமணம் இமயமலையில் நிகழ்ந்தது. அவ் அருமைக்கோலத்தைக் காண விரும்பி அமார், விஞ்சையர், சித்தர், கந்தருவர், முனிவர் முதலிய அனைவரும் திரண்டு போய் அங்கு அமர்ந்திருந்தனர். நமது குறு முனிவரும் அவண்போந்து பரமனருளை நினைந்து ஒர் இனிய இடத்தில் தனியமர்ந்திருந்தார். மணத்திற்குக் குறித்தகாலம் வந்தது; உயிர்க்கணங்கள் யாவும் உளங்களித் தெதிர்நோக்கி நின்றன. மலர்மகளும் கலைமகளும் மலைமகளாகிய உமையம்மையை உரிமையோடு அலங்கரித்து நின்றனர். அமரமங்கைய ரனைவரும் கனிந்த அன்போடு நிறைந்து நெளிந்தனர். செம்