இருப்பு. 25 இத்தகைய பொதியமலையில் இவர் பொருந்தியிருந்த கால த்து, இலங்கையிலிருந்து கன் ஆட்சியை எங்கும் செலுத்தி கின்ற அரக்கர் வேந்தனகிய இராவணன் புதுமையாக இவர் போந்துள்ளமையை யறிந்து ஆங்கு விமானமூர்ந்து விரை த்து வந்தான். இவரைக்கண்டான். முகமண்டலத்தில் ஞான எழில் பொலிந்து திகழ மோனமாயிருக்கும் இவரது பான் மையை நோக்கி உவந்தான்; ஆயினும் தன் மேன்மையோடு நெருங்கி வந்து என் உத்தரவின்றி யீண்டு எவ்வாறு வந்து 母仔 தங்கியிருக்கலாம் ’ என்று அவன் பொங்கி வினவினன். இவர் புன்னகைசெய்து அவனைப் புரிந்து நோக்கி “என் கட் டளையில்லாமல் நீ இங்கு எப்படி வரலாம்” என்று எதிர்ந்து கேட்டார். படைத்த பிரமனும் என்ைேடு இப்படி எதிர்த் துப் பேசானே! யான், யார் என்று உமக்குக் தெரியுமா? என அவன் தெளித்து கின்ருன். வேதங்களை யெல்லாம் நன்கு தெளிந்த ஒர் விவேந்தன் என முன்னரே உன்னை யான் அறிந்துள்ளேன் என்று இவர் மொழிந்து கின்ருர். உடனே அவன் மகிழ்ந்தான். இவரது உறுதியையும் பெரு மிகத்தையும் கினைந்து கினேந்து வியந்தான். அவன் அங்ங் னம் வியந்து கிற்குங்கால் 'சாமகானஞ்செய்து சாமியையும் நீ வசப்படுத்திய காகக் கேள்வியுற் றிருக்கிறேன்; எங்கே அதனைக் கொஞ்சம் பாடுக பார்க்கலாம்” என்ருர், இவரது கேள்வியை அறிந்து அவன் கேண்மைமீக்கூர்ந்து உமக்கும் பாடவருமோ?’ என்ருன். இவர் வரும் என்ருர். அதனைக் கேட்ட அளவில் அவன் அளவிலுவகை கொண்டு எங்கே பாடும் என்ருன். கீதச்சுவையை நன்கு அனுபவித்துத் திளைக் துள்ளவ கைலால் இவரும் அதில் வல்லுநர் என்று தெரிந்த வுடனே விரைந்து விமானத்தி லிருந்து தன் வீணை 4.
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை