பக்கம்:அகத்திய முனிவர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                                  6

வாக்கு. 'யாது பாவித்திடினும் அதுவாகி நிற்பை' என்னும் பொருளைப் பொதிந்து வடமொழி நூல்கள் பல படியாக உரை தருகின்றன. களங்கமற்ற நெஞ்சோடு எதனை நேசிக்கின்றோமோ அதனை நாம் கைவரப் பெறுவோம். “What we love that we have” என்பது ஓர் சிறந்த ஆங்கிலப் புலவரின் ஆழ்ந்த கருத்தாகும். எமர்சன் என்னும் அமரிக்க நுண்ணறிவாளரும் இப் புலவரை வியந்து புகழ்ந்திருக்கின்றனர். மன்னுயிர்க்கு ஆக்கமாகிய இம் மன நலமும் இன நலத்தினாலேதான் ஒளிபெற்று உயர் வுறுகின்றது.

    'மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம்
     எல்லாப் புகழும் தரும்' (குறள்)
    இனநலம் என்றது குணநல முடைய மேலோரை, இத்தகைய தெள்ளியோ ரெல்லாரும் உள்ளிப்போற்றும் வள்ளலாகிய அகத்திய முனிவரது அரிய சரிதத்தை இந்நூல் இனிது விளக்கி யுள்ளது. இதன் உள்ளுறை நலங்களே யூன்றி யுணர்ந்து உளங்கொண் டொழுகின் உயர்நலம் அடையலாம்.

   அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியை அழகு பெறச் செய்து இனிய முறையில் உலகில் நிலைபெற வைத்துக் கலைமகளின் தலைமகனா யுள்ள இம் முனிவர் பெருமானது சரித வுணர்ச்சி கலைபயில் மாணவர்க்குப் பெருநலந் தரும். ஆதலால் இதனை அவர் ஓதி யுணர்ந்து உயர் பயனுறும்படி கலைநலம் பேணும் அறிஞர் பெருமக்கள் உதவி யருள்வார்கள் என்று நம்புகின்றேன்.

திருவள்ளுவர் நிலையம்

    மதுரை
                                 
                                                                  இங்ஙனம்                                                            
                                                       ஜெகவீரபாண்டியன்