பக்கம்:அகத்திய முனிவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அகத்தியமுனிவர். ளும் இன் புற்றிருக்குமாறு எண்ணி எல்லாவுயிர்க பொழுகுங் தண்ணளியாளர். உயிர்கட்கு இதஞ்செய் தொழுகலே உயர்ந்தவர்க்கு இயல்பாம். எவ்வளவுக்கெவ் வளவு இத்தன்மையில் ஒருவன் அமைந்து கிற்கின்ருனுே அவ்வளவுக்கவ்வளவு அவன் உயர்ந்தவனுகின்ருன். இக் தன்மை குன்றுவார் புன்மையாளராய்ப் பொருத்தியிழிவர். கம் உளத்தில் அமைந்த அருட்பண்பிற்குத் தக்கவாறே பெரியோரெனச் சிறப்புற்றிருக்கின்ருர். பிறவுயிர் சிறிது வருந்தக் காணினும் அவர் உள்ளம் உருகி விடுகின்றது. வேருென்றை ஒருவர் கொல்லின் அந்நேரம் ஐயோ! என் முகம் வாடி கிற்பதுவும் ஐய! கின் அருளறியுமே” என்பது தாயுமானவர் வாக்கு. இதனுல் அவரது அருளினியல்பு இனிது புலனுகின்றது. புறத்தில் தோன் அகின்ற இத் தகைய வாக்கு மூலங்களே அவாவாது அகநிலைகளை கோக்கி யறிதற்குத் தகுதியான கருவிகளாயுள்ளன. இங்ங் னம் செந்தண்மை பூண்டொழுகலே முற்றத் துறந்த முனி வோருக்குத் தகவாகுமாதலால் அவ்வுண்மைக்கு இவரோர் தனி புரிமையா யினிதமர்ந்திருந்தார். 'அந்தணர் என்போர் அறவோர் மற் றெள் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.” (குறள் 30) என்பது தேவாருளுாை. ஒழுகலான், அறவோர் என்றதலை அங்கனம ஒழுகாதார் மறவோர் என்ப தாயிற்று. இத் தெய்வத் திருமொழியின் பொருளருமை களை யூன்றி புணர்க. பசி முதலியவற்றால் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பொறுத்தும், வினை முதலியவற்றால் பிறர்க்கு நேர்ந்த இடர்களை யறுத்தும், தம் மன மொழி மெய்களை யாண்டும் புனித நீர்மையில் வைத்து இனிதொழுகுவோனே