பக்கம்:அகத்திய முனிவர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 அகத்தியமுனிவர்.

    அறத்துறை பயிலும் மானததீர்த்தம் ஆடலராகி நீராடிற், புறத்தழுக் கொழிவதல்லது புனிதராகிலர்; பூந்திரை சுருட்டும், சிறைப்புனலதனில் முழையுறழ் பகுவாய்த் தீவிழிக் கூரெயிற் றிடங்கர், சுறக்குல முதல அளப்பருங்காலதந் தோய்ந்ததால் துறக்கமுற் றனவோ? (காசிகாண்டம்) (உ)
    அகத்தில் நல்ல குணங்களில்லாதவன் புறத்திலுள்ள வெள்ளங்களில் போய் வீழ்த்து வந்ததனால் அவன் மேன்மையடைந்து கொள்ளான் என இது விளக்கி நிற்றல் காண்க. உள்ளந்திருந்தாதவன் புறத்தில் உயர்ந்தவன் போல் எவ்வளவு நடித்தாலும் உண்மையில் அவன் உயர்ந்தவனாகான். ஊற்றுப் புனிதமாயிருந்தால் அதிலிருந்து ஊறிவரும் நீரும் இனியதாம்; அதுபோல் ஒருவன் மனம் நல்லதாயிருந்தால் அவன் மொழிசெயல்களெல்லாம் நல்லனவாகும்.
    இங்ஙனம் மனநலம் வாய்ந்து இனிய ஞானசீலராய் நின்று புனிதநிலை யெய்திய முனிவரெவரினும் குணநிலையில் இவர் முதன்மையெய்தி நின்றார். தவவாழ்க்கையிலிருந்தாலும் உலக வொழுக்கங்க ளெல்லாவற்றையும் வழுவறத் தெளிந்து இவர் உயர்ந்திருந்தார். இருவினைகளும் விளைதற்கு நிலைக்களமாயுள்ள முப்பொறிகளையும் செப்பமுறச் செய்து இவர் சிறந்து விளங்கினார்.
    "உள்ளச் செய்தி தெள்ளிதிற் கிளப்பின்
     இருள் தீர் காட்சி; அருளொடு புணர்தல்;
     பெரும்பொறை தாங்கல்; பிறன்பொருள் விழையாமை;
     செய்த நன் றறிதல்; கைதவங் கடிதல்;
     பால்கோடாது பகலிற் றோன்றல்;