பக்கம்:அகத்திய முனிவர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 அகத்தியமுனிவர்.

    வன்றது கண்மை; வாளிட்டாங்கு
    நோவன செய்யினு மேவன செய்தல்;
    
    தவச்சிறி தாயினும் மிகப்பல விருந்து
    பாத்தூண் செல்வம்; பூக்கமழ் இரும்பொழில்
    தன்மனைக் கிழத்தி யல்லதைப் பிறர்மனை
   அன்னையிற் றீரா நன்ன ராண்மை; ” (ஞானாமிர்தம்)

என்னும் இன்னவகையான நன்னயங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்து பெருங்குணக்குரிசிலாய் இவர் சிறந்திருந்தார்.

அரசராயினும் முனிவராயினும் ஏதேனும் தமக்கோர் துயர மணுகினால் இவரையணுகி இடர் நீங்கி இன்புற்று நின்றார். சிறியாரைப் பெரியார் நலியாதபடி எவரையும் இவர் பேணி வந்தார். நல்லவர்க்கெல்லாம் நற்றாய் என இவர் நண்ணியிருந்தார். எழை பங்காளரா யிசைந்திருந்தமையால் இறை யென எவரும் இவரை இறைஞ்சி யேத்தினார். தாம் கருதிய வினையைக் கடைபோகச் செய்து உறுதிபெற முடிக்கும் உண்மையாளராயிவர் உயர்ந்திருந்தார்.

ஒருமுறை உத்தரகுருவிலிருந்து வந்த முனிவர் சிலர் நைமிசத்தின் தென் பாலிருந்த ஓர் தனி வனத்தில் அச மேதம் என்னும் அரிய வேள்வி ஒன்றை ஆற்றி நின்றார். அவ் வேள்வியருகில் மந்திர முறையோடு நாட்டியிருந்த யூபத்தறியில் ஒர் ஆட்டைக்கொண்டுவந்து கட்டியிருந்தார். இயல்பாக அவ்வழி வந்த இவர் அதன் நிலைமையை நோக்கி நெஞ்சம் இரங்கி அதனை அவிழ்த்துவிடும்படி அவரிடம் உரைத்தார். வேதத்தில் கூறிய விதிப்படி யாங்கள் இவ்யாகத்தைச் செய்கின்றோம்; தேவர் வேறு கூறுவது