பக்கம்:அகத்திய முனிவர்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலின் பயன்.


சிவக்கட லதனில் எழுந்தபன் னிருகைத்
தெள்ளமிழ் தருள்சிறி தடைந்து
புவிக்கடல் குடித்துத் தமிழ்க்கடல் விரித்துப்
புகழ்க்கடல் பெருக்கிய புனிதத்
தவக்கடல் குணத்தின் தனிக்கடல் குடத்தில்
தயங்கிய அருட்கடற் கதையாம்
அவிக்கடல் படிவார் பவக்கடல் படியார்
ஆனந்தக் கடல்படிந் துயர்வார்.