பக்கம்:அகத்திய முனிவர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் 75 படி யூடு புகுவதெனப் பணிந்து மறைக்கிழவரெழிற் படிவம் தாங்கித் கடமேருவுடன் இகலும் விக்கவசை முனிவன் அடி தாழ்ந்ததன்றே; தன் துணைத்தாள் தொழுதெழுந்த வித்தவரை முகநோக்கிக் தவத்தின் மிக்கோன் இன்றுமுதல் பொதியவரை நீங்கியான் இவ்வுழிமீட் டெய்து கா.அம், உன்றன.து பேருருவம் இவ்வண்ணம் இருக்கவென உரைத்துப்போனுன் தென்றல் இளங்குழவியொடு தீந்தமிழும் இனிதுலவும் தென்பால் மன்னே.” (காசிகாண்டம்) இந்த வண்ணம் இவர் விந்தம் அடக்கிய உண்மை கந்தபுராணம் முதலிய பல நூல்களிலும் காணலாகும். இசைதிசை பாப்பித் தென் திசை புகுந்த இவர் திருக் குற்றாலத்தை யடைந்தார். அவ்வமயம் அங்குத் திருமால் கோயில் கொண்டிருந்தார். அப்பெருமாள் கோவிலைச்சுற்றி இரு நூறு வேதியர் இல்லங்கள் எதிரெதிரா யிசைந்திருந் தன. அவானைவரும் ஒருமாலடிக்கே பெருமால் கொண் டவர். சிவ வேடத்துடன் வந்த இவரைக் கண்டவுடனே அவர் கடுத்தார்; கோயிலுட் புகலாகாதென்று தடுத்தார். விரிந்த கல்வியும், தெளிந்த அறிவும் இல்லாமல் குறுகிய நோக்குடையாாய் மறுகியிருக்கும் அவரது புல்லிய கிலே யைக் கண்டு இவர் புன்னகை புரிந்து விரைந்து மீண்டு வேருெரு இடம்போய் கின்று யாரும் கேறலாகாவண்ணம் சீரியதோர் வைணவ வேடங்கொண்டு மாறி வந்தார்.