பக்கம்:அகத்திய முனிவர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 அகத்திய முனிவர். கைப் புராணம், காஞ்சிப்புராணம், சேதுபுராணம், காசி காண்டம், தேவிபாகவதம் முதலிய யாவும் இவர் பெரு மையை விழுமிதாக விரும்பியுள்ளன. "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து " வேண்டும் பனுவல் துணிவு' (குறள் 21) என்னும் அணிமொழிக்கு இவர் துணி பொருளாயுள்ளமை ஈண்டு எளிது தெளியலாகும். அருந்தவர் முதலாக அக்காலத் திருந்த அரசர் பலரும் இப்பெருந்தகையின் திருநாமத்தை இனிய மந்திரமாக எண்ணி நின்றனர். "நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே" என்று முழுமுதற்பரமனோ டும் எதிர் நின்று வாதாடிய புலவர் சிங்கமாகிய நக்கீரரும் தலையன்புடன் நிலையாக இவரை வழிபட்டு வந்தனர். வருங் கால் வாரணாசியிலிருந்து கொண்டான் என்னும் குயவன் அவன் வட ஒருவன் மதுரைக்கு வந்தான். மொழியிற் பெரிய புலவன். அரிய கலைகள் பலவும் தெளிந்தவன். வடநாட்டிலிருந்த ஆரிய அரசர் பலரும் உவந்து பேண உயர்ந்து நின்றவன். அத்தகைய பீடமைந்த அவன் கூட லம் பதியை யடைந்து சங்கமண்டபத்துள் புகுந்து அங்குத் தங்கியிருந்த புலவர்களுடன் புலமை நலந்தோன்ற உரை யாடி யிருந்தான். இருந்தவன் ஒருநாள் வடமொழியே சிறந்தது; தமிழ் அவ்வளவு உயர்ந்ததன்று என்று தருக்கி மொழிந்தான். மொழிப்பற்றோடு கொழுப்புற்றுரைக்கும் அவனது அறியாமைக்கு இரங்கிக் கீரர் எதிரே வந்து தமி ழின் அருமை பெருமைகளை இனிது மொழிந்தார். அவன் சிறிதும் இசைந்துகொள்ளாமல் "ஆரியத்தில் ஆரணங் களும் மந்திரங்களும் அமைந்துள்ளன; தமிழில் யாதுளது; ஒன்றும் இல்லையே; என்று மேலும் மேலும் அவன்