பக்கம்:அகத்திய முனிவர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 அகத்திய முனிவர்.

யுற்றுள்ளது. இதன் விரிந்த தோற்றம் இறைவனின் சிறந்த ஏற்றத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றது. மன்பதைகள் அமர்ந்து இன்புற்று வாழ்தற்கு இனிய நிலைக்களனாயிசைந்திருத்தலால் பூமிதேவி என்று நாம் இதனைப் புகழ்ந்து போற்றுகின்றோம்.

     'அன்னையென ஆருயிர்கள் ஆரப் புரந்தருளி
     என்னைபிழை செய்தாலும் ஏற்றமைந்து-பின்னையுந்தான்
     பேணி வளங்கள் பெருக்கி இனிதூட்டும்
     நீணிலமே தெய்வம் நினை'

என்றபடியே என்றும் நின்று நினைந்து வருகின்றோம். இத்தகைய இவ்வுலகம் சிறந்து வருதற்குப் பெரியோர்கள் இடையிடையே பிறந்து வருகின்றார்கள். நல்லமக்களைப் பெற்ற நற்றாயர்போல் அவர்கள் வரவால் இவ்வுலகமாதா பெரிய மகிழ்ச்சியையடைகின்றாள். ஒருகுலம் அதில்தோன்றியுள்ளவர்களின் தலைமைக்குத் தக்கபடி நலமுறுதல் போல் இந்நிலமும் நலமுறுகின்றது. உயர்ந்தோர்களாலேதான் இவ்வுலகம் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கின்றது. சந்திரனுடைமையால் இரவு சுந்தரமுறுகின்றது; மணத்தால் மலர்கள் மாண்புறுகின்றன; அருளால் நெஞ்சம் தெருளடைகின்றது; கண்களால் யாக்கைகள் கவினுறுகின்றன; அவ்வாறே உலகமும் மேலோ ராலேதான் மேன்மை யுறுகின்றது. அவர் இல்லையாயின் இவ்வுலகமானது மதியில்லாத விசும்பையும், மணமில்லாத மலரையும், அருளில்லாத நெஞ்சையும், கண்ணில்லாத முகத்தையும், உயிரில்லாத உடம்பையும் போல் பொலிவிழந்து காணப்படும். உயர்ந்தோரெல்லாம் உலகினுக்கு உயிரேயாவர். அவர் பிறந்துவருதலாலேதான் இது சிறந்து வருகின்றது. இதன் தன்மைக்கும் பெரியா