________________
84 கடைச்சங்க அகத்தியமுனிவர். காலத்தில் ஒருமுறை அருளுருக் கொண்டுவந்த பரமன் உமாதேவியாரை நோக்கி, "கீரன் இலக்கண இலக்கியங்களைக் கலக்கமறக் கற்றவ னாயினும் பழுதற்ற புலமைத் தெளிவு இன்னும் நன்கமைய வில்லை; அது நன்றமைந்து வர அவனை எங்கு அனுப்ப லாம்?" என வினோதமாக வினவினார். அப்பொழுது உமை யம்மையார் இவரிடமே அனுப்பியருளும்படி. இனிது மொழிந்தார். அங்ஙனம் மொழியுங்கால் எதனால் இங்ங னம் குறுமுனியைக் குறித்தாய்? என்று இறைவர் குறு நகை செய்தார். தாங்கள் முன்பு குறித்ததிலிருந்துதான் இன்று யான் குறித்தேன் எனத் தேவியார் கூறினார். யான் குறித்தது என்னை? என்று அம் முன்னவர் நோக்க அவ்வமையம் அம்மையுரைத்தபடியை அடியில் பார்க்க. "பைத்தலை புரட்டு முந்நீர்ப் பௌவமுண்டவனே எம்மை ஒத்தவன்; அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா முத்திரை இமவான் பெற்றமுகிழ் முலைக்கொடி ஒப்பாள்; என்று அத்திருமுனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே இங்ஙனம் பண்டுமொழிந்தபடியைக் கொண்டு கூறிய தைக் கேட்டு அவ்வள்ளல் உள்ளுவந்து கீரரை இவரிடம் உய்த்தார். அவர் வந்து வணங்கி இவர் மருங்கமர்ந்திருந்து அருங்கலைகளை ஒருங்குணர்ந்து சென்றார். அதன்பின் இனைவறுகுறுமுனி இலக்கணம் பெறப் புனைதரும் இலக்கி யப் புலவர் சிங்கம்" என அவர் நிலவி நின்றார். அறுமுகப் பெருமானிடம் இவர் அருளுபதேசம் பெற்றிருந்தாராதலால் தமிழ்ப்புலமைக்கு இவர் தலைமை எய்தி அறிவுநிலையம் என நிலவி நின்றார்.