பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

களிற்றியானை நிரை

௧௧௧


௧௦-௩. வான் புலந்து வருந்திய - மேகத்தை வெறுத்து வருந்திய, மடமான் அசா இனம் - தளர்ச்சியுற்ற இளைய மானின் கூட்டம், திரங்கு மரல் சுவைக்கும் காடு - வற்றிய மரற்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில், விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி - வலிமை மிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாராட்டி, வறன் நிழல் அசைஇ - உலர்ந்த நிழலிலே தங்கி, உடன் கழிதல் அறியின் - இவளை உடன் கொண்டு கழிதலை அறியின்,

க௩-அ. தந்தை - இவள் தந்தையது, அல்கு பதம் மிகுத்த கடி யுடை வியன் நகர் - தங்கும் உணவு மிகுந்துள காவல் பொருந்திய பெரிய மனையில், செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல - செல்லும் இடந்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று, கோதை ஆயமொடு ஓரை தழீஇ - கோதையையுடைய ஆயத்தாரோடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு, தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப- தொகுதி வாய்ந்த பரலினை யுடைய சிலம்பு ஒலிக்க, அவள் ஆடுவழி ஆடுவழி- அவள் விளையாடும் இடந்தோறும், அகலேன் மன்னே - அகலாதிருப்பேன்; அது கழிந்ததே.

(முடிபு) வெய்யோள் முன்னாட் போலாள், உயிர் இறீஇயரெனக் கறவை யின் நோக்கி, வந்து, நீவித் தழீஇயினேனாக, என் மகள் வியர்ப்ப, முயங்கினள் மன்னே ; காடுடன் கழிதல் அறியின், வியனகர் செல்வுழிச் செல்வுழி நிழல் போலத் தழீஇ, ஆடுவழி ஆடுவழி அகலேன், மன்னே.

நெடுந்தகை, பாராட்டி, அசைஇ, கழிதல் எனவும், மெய்ந்நிழல் போல அக லேன் எனவும் கூட்டுக.

(வி - ரை.) இயல்பு - செய்தி. '1'குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை', ' ஆவும் எருமையும் அவை சொலப்படுமே' என் பவற்றால், குழவி யென்றார், மரத்துவயின் எனவும், முலையிடை எனவும் மாறுக. கடுங்கண் : கடுமை - விரைவு. வியர்ப்பவும் பல்கால் முயங்கியது போக்கை நினைந்து என்க. மன் இரண்டும் கழிவின் கண் வந்தன. அல்கு பதம் - வைத்திருந்துண்ணும் உணவு ; மிக்க உணவு. உடன் கழிதல் - உடன் கொண்டு கழிதல். பாராட்ட எனத் திரித்து, இருவரும் கழிதல் என்றுரைத்தலுமாம். அடுக்குகள் பன்மை குறித்தன. அன்னோ , இரக்கப் பொருட்டு.

(மே-ள்.) 2'கொண்டு தலைக் கழியினும்' என்னுஞ் சூத்திரத்து, 'அல்குபத மிகுத்த கடியுடை வியனகர் என நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம்' எனவும், 3'எஞ்சியோர்க்கும் எஞ்சுதலிலவே' என்னுஞ் சூத்திரத்து, செவிலி கூற்று நிகழ்வதற்கு இப் பாட்டினை எடுத்துக் காட்டி, 'இவ் வகப்பாட்டு உடன் போன தலைவியை நினைந்து செவிலி மனையின்கண் மயங்கியது' எனவும் கூறினர் நச்.




1. தொல். மரபு. க௬ ; உ0. 2. தொல். அகம். க௫. 3. தொல். அகம். ௪உ.