பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௧௨

அகநானூறு

[பாட்டு


50.நெய்தல்

[தோழி பாணனுக்குச் சொல்லியது.]


கடல்பா டவிந்து தோணி நீங்கி
நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப்

ரு) பகலும் நம்வயின் அகலா னாகிப்
பயின்றுவரும் மன்னே பனிநீர்ச் சேர்ப்பன்
இனியே, மணப்பருங் காமந் தணப்ப 1நீந்தி
வாரா தோர்நமக் கியாஅரென் னாது
மல்லல் மூதூர் மறையினைச்மறையினைசென்று

க௦) சொல்லின் எவனோ பாண எல்லி
மனைசேர் பெண்ணை 2மடிவாய் அன்றில்
துணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக்
கண்ணிறை நீர்கொடு கரக்கும்
ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே.

- 3கருவூர்ப் பூதஞ் சாத்தனார்.

(சொ - ள்.) க0. பாண - பாணனே!

க-௬. பனி நீர்ச் சேர்ப்பன் - குளிர்ந்த கடற்கரையையுடைய நம் தலைவன், கடல்பாடு அவிந்து-(முன்பு) கடலொலி அவிய, தோணி நீங்கி - தோணி கடலிற் செல்லாதொழிய, நெடு நீர் இருங்கழி - மிக்க நீரினையுடைய பெரிய கழியில், கடுமீன் கலிப்பினும் - சுறா முதலியன செருக்கித் திரியினும், வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்- கொடிய வாயினராய பெண்டிர் அலர் தூற்றினும், மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப - மாண்ட இழையினையுடைய நீண்ட தேர் தாழ்த்து நிற்க, பகலும் நம்வயின் அகலானாகி - பகற் காலத்தும் நம்மிடத்து நின்றும் பிரியானாகி, பயின்று வரும் மன்னே. அடுத்தடுத்து வருவன், அது கழிந்தது;

எ-க௪. இனி - இப்பொழுது, மணப்பு அருங் காமம் - களவுக் காலத்துக் கூடுதற்கரிய வேட்கை, தணப்ப - நீங்குதலால், நீந்தி வாராதோர் - தாம் சென்றிருக்கும் இடத்தைக் கடந்து வாராதொழிவார், நமக்கு யார் என்னாது - நமக்கு என்ன உறவினர் என்னாது, ஒள் நுதல் அரிவை - ஒள்ளிய நெற்றியையுடைய தலைவி, எல்லி - இரவில், மனை சேர் பெண்ணை - மனையைச் சார்ந்துள்ள பனை மரத்தில், ஒன்று துணை பிரியினும் - ஒன்றி யிருத்தலினின்றும் துணை சிறிது பிரியினும், மடிவாய் அன்றில் - வளைந்த வாயினையுடைய அன்றில்கள், துஞ்சா காண் என - துயிலாதன வாதலை நெஞ்சே காண்


(பாடம்) 1. நீங்கி. 2. மடல்வாய் அன்றில். 3. கருவூர்ப் பூதனார் மகனார் கொற்றனார்.