பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௧௪

அகநானூறு

[பாட்டு


வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு, 'எல்லி, மனைசேர் ... என் செய்கோ எனவே' என்னும் பகுதியை எடுத்துக் காட்டினர் பேரா.



51. பாலை

[பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல் லியது.]


ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற
நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப்
போழ்வளி முழங்கும் புல்லென் உயர்சினை
முடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி

ஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி
எருவைச் சேவல் கரிபுசிறை தீய
வேனில் நீடிய வேயுயர் நனந்தலை
நீயுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்

க0) 1பிரியிற் புணர்வ தாயிற் பிரியாது
ஏந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப
நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே.

- 2பெருந்தேவனார்.


(சொ - ள்.) க-எ. ஆள் வழக்கு அற்ற - ஆட்கள் இயங்குதல் ஒழிந்த, சுரத்திடை - அத்தத்தில், கதிர் தெற நீள் எரி பரந்த - ஞாயிற்றின் கதிர்கள் காய்தலின் மிக்க வெம்மை பரவிய, நெடுந் தாள் யாத்து - நீண்ட அடியினையுடைய யாமரத்தின், போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை - பிளந்து செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில், முடை நசை இருக்கை - புலால் விருப்பத்துடன் இருத்தலையுடைய, பெடை முகம் நோக்கி - தன் பெடையின் முகத்தினைப் பார்த்து (எழும்), ஊன் பதித்தன்ன வெரு வரு செஞ்செவி - ஊன் துண்டினைப் பதித்து வைத்தாற் போலும் அச்சத்தைத் தரும் சிவந்த செவியினை யுடைய, எருவைச் சேவல் - ஆண் பருந்தின், சிறை கரிபு தீய - சிறை கரிந்து தீய்ந்திட, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை - வேனில் வெப்பம் மிக்க மூங்கில் உயர்ந்த அகன்ற காட்டிடத்தில், -

அ-க. நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி - நீ வருந்திச் செய்யும் வினைகளால் அடையப்படும் பொருள், பல் இதழ் மழைக்கண் - பல இதழ்களையுடைய பூப்போலும் குளிர்ந்த கண்ணினை யுடைய, மாயோள் வயின் - மாமை நிறத்தினளாய நம் தலைவியிடத்


(பாடம்) 1. பிரியப்புணர்வதாயின். 2. கடுகு பெருந்தேவனார்.