பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௧௬

அகநானூறு

பாட்டு




இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை

கரு) காம நோயெனச் செப்பா தீமே.

- 1நொச்சி நியமங்கிழார்.


(சொ - ள்.) கஉ. தோழி வாழி-,

௬. அன்னைக்கு - நம் தாய்க்கு,

க௩-௪. நின் மகள் ஆய் மலர் உண்கண் பசலை - நின் மகளது அழகிய மலரனைய மையுண்ட கண்ணிற் படர்ந்த பசலையானது,

க-அ. மரன் ஓங்கு சாரல் - மரங்கள் உயர்ந்த பக்க மலையிடத்து, வலந்த வள்ளி - சுற்றிய கொடியையுடைய, கிளர்ந்த வேங்கை - செழித்தெழுந்த வேங்கை மரத்தினது, சேண் நெடும் பொங்கர் - மிக வுயர்ந்த கிளையிலுள்ள, பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள் - பொன்னை யொத்த புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள், இன்னா இசைய பூசல் பயிற்றலின் - இன்னாமையைத் தரும் ஒலியையுடைய புலி புலி என்னும் ஆரவாரத்தினை அடுத்தடுத்து எழுப்பலின், ஏ கல் அடுக்கத்து - உயர்ந்த பாறைகளின் அடுக்கையுடைய, இருள் அளைச் சிலம்பின் - இருண்ட குகையினை யுடைய பக்க மலையில், ஆ கொள் வயப்புலி ஆகும் அஃது என - பசு வினைக் கவரும் வலிய புலியைக் குறித்த ஒலியாகும் அஃது என்று எண்ணி, சிலையுடை இடத்தர் - வில்லை இடக்கையிற் கொண்ட கானவர், தம் மலைகெழு சீறூர் புலம்ப- தமது மலையை யடுத்துள சிறிய ஊர் தனிப்ப, கல்லெனப் போதரும் நாடன் - கல்லெனும் ஒலியுடன் செல்லாநிற்கும் நாட்டையுடைய நம் தலைவனது,

௯-கஉ. நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்தென - நமது நெஞ்சை இடமாகக் கொண்ட பெரிய மார்பினைக் காரணமாக உடையது என, அறிவிப்பேம்கொல் அறிவியேம்கொல் என - தெரிவிப்பேமோ தெரிவியா தொழிவேமோ என, இருபாற்பட்ட சூழ்ச்சி - இருவகையிற்பட்ட ஆராய்ச்சி, ஒருபாற் சேர்ந்தன்று -ஒரு முடிபிற்கு வந்துள்ளது; -

கஉ-ரு. யாக்கை இன்னுயிர் கழிவது ஆயினும் - நமது யாக்கை யினின்றும் இனிய உயிர் பிரிவதாயினும், காம நோயெனச் செப்பா தீமே - இது காம நோயால் உண்டாயதென இங்ஙனம் விளங்க உரையாதே.

(முடிபு) தோழி வாழி! அன்னைக்கு நின் மகள் உண்கண் பசலை, நாடன் மார்பைக் காரணமாக வுடைத்தென அறிவிப்பேங்கொல், அறிவியேங் கொல்லென இருபாற்பட்ட சூழ்ச்சி ஒருபாற் சேர்ந்தன்று; இன்னுயிர் கழிவதாயினும் காம நோயெனச் செப்பாதீம்.


(பாடம்) 1. மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார்.