பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

களிற்றியானை நிரை

௧௧௭


(வி - ரை.) வலத்தல் - சுற்றுதல். வள்ளி - கொடி ; 1“வாடிய வள்ளி முதலரிந் தற்று” என்பது காண்க. பொன் ஏர் - பொன் போலும் அழகிய என்றுமாம்.

பூசல் - புலி புலி என்னும் ஆரவாரம் ; அச்சத்தை விளைப்பதாகலின், இன்னா விசைய என்றார். வேங்கை மலர் பறிப்பார் புலி புலி என்று கூவுதல், 'ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப், புலி புலி யென்னும் பூச றோன்ற' (சஅ) என முன்னரும் வந்துளது.

ஏ கல் - மிக்க கல் ; 2"ஏ பெற்றாகும்" என்பது உரியியல். அறியலம் என்ற பாடத்திற்கும் அறிவியேம் எனப் பிறவினைப் பொருளே கொள்க.

மார்பு உடைத்து - மார்பினைக் காரணமாக உடையது என விரிக்க. காமநோ யெனச் செப்பா தீமே - ஆராய்ந்து காணுமாறு குறிப்பினாற் சொல்லுக என்றபடி.

(உ - றை.) 'வேங்கையைக் கொடி சூழ, அவ் வேங்கையிலே அலர் உண்டான அளவில், ஆண்டு வாழும் மகளிர் புலி புலி யென்று பூப்பறித் தற்குச் சொன்ன அரவத்தாலே ஊரெல்லாம் ஆரவாரித்தாற்போல, அவரை நாம் தலைப்பெய்த அளவிலே, அலர் பிறந்ததாக, அவ்வலர் முதற் சீராலே முகிழ் முகிழ்த்துப் பின்னை யெல்லாரும் அறிந்தது என்றவாறு' என்றனர் குறிப்புரைகாரர்.

(மே - ள்.) 3'மறைந்தவற் காண்டல் ' என்னுஞ் சூத்திரத்து, 'விட்டுயிர்த் தழுங்கினும்' என்பதற்கு, கரந்த மறையினைத் தலைவி தமர்க்கு உரைத்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அக் கூறியதனையே தமர் கேட்பக் கூறாது தவிரினும் எனப் பொருள் கூறி, அதற்கு இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது சிறைப்புறம் என்றும், 4'செறிவு நிறையும்' என்னும் சூத்திரத்து, இவை உடையளெனவே (தலைவி) மறை புலப்படுத்தற்கு உரியள் அல்லள் என்று கூறி, 'இன்னுயிர் கழிவ தாயினும் . . . செப்பா தீமே' என்றது அவ் விலக்கணத்ததாம் என்றும் கூறினர் நச்.

5'முட்டுவயிற் கழறல்' என்னுஞ் சூத்திரத்து, 'முனிவு மெய்ந் நிறுத்தல்' என்பதற்கு, 'இன்னுயிர் கழிவ தாயினுஞ் . . . செப்பாதீமே' என்பதனை எடுத்துக் காட்டி, இது வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது என்றார் பேரா.



53. பாலை


[வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]


அறியாய் வாழி தோழி யிருளற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்


1. குறள். ௧௩௦௪. 2. தொல். உரி, அ. 3. தொல். களவு. உ0. 4. தொல். பொருளியல். கரு. 5. தொல், மெய்ப்பாடு, உ௩.