பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௨௨

அகநானூறு

[பாட்டு


55. பாலை


[புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலி லாட்டியர்க்கு உரைத்தது.]


காய்ந்து செலற் கனலி கல்பகத் தெறுதலின்
நீந்து குருகுருகும் என்றூழ் நீளிடை
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்
விளிமுறை அறியா வேய்கரி கானம்

ரு) வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேஎன் கனவ ஒண்படைக்

க0) கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் ணாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர்

கரு) பெரும்பிறி தாகி யாங்குப் பிறிந்திவண்
காதல் வேண்டியென் துறந்து
போதல் செல் லாவென் உயிரொடு புலந்தே.

- மாமூலனார்.

(சொ - ள்.) க-௬. காய்ந்து செலல் கனலி - வெம்மையுற்றுச் செல்லுதலையுடைய ஞாயிறு, கல் பகத் தெறுதலின் - மலை பிளக்கக் காய்ந்திடலால், நீந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை - கடந்து செல்லும் பறவைகள் இனைதற்கு ஏதுவாகிய வெப்ப மிக்க நீண்ட விடத்தே, உளிமுக வெம்பரல் - உளி போலும் வாயையுடைய கொடிய பரற்கற்கள், அடி வருத்துறாலின் - அடியிற் பதிந்து வருத்துதலின், விளிமுறை அறியா - இறக்கும் இடம் இன்னது என்று அறியலாகாத, வேய்கரி கானம் - மூங்கில் கரிந்தொழியுங் காட்டில், வயக்களிற்றன்ன காளையொடு - வலிய களிற்றினை யொத்த காளையுடன், என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலன் - என் மகள் உடன் போயதற்கு வருந்தினேன் அல்லேன்;

௬-௯. யான் ஒழிந்து - யான் அவளைப் பிரிந்திருந்து, ஊது உலைக் குருகின் - உலைக்கண் ஊதும் துருத்திபோல, உள் உயிர்த்து அசைஇ - வெய்துயிர்த்து உள் மெலிந்து, வேவது போலும் வெய்ய நெஞ்ச மொடு - தீயில் வேவது போலும் வெவ்விய நெஞ்சமொடு, கண்படை பெறேஎன் கனவ - கண் துயிலேனாய் வாய் வெருவிப் புலம்ப,

௯-கரு. ஒண் படைக் கரிகால் வளவனொடு - ஒளிதங்கிய படை யினை யுடைய கரிகால் வளவனொடு, வெண்ணிப்பறந்தலைப் பொருது-வெண்ணிப் போர்க்களத்தே போர் செய்து, புண் நாணிய - புறப்