பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58]

களிற்றியானை நிரை

கஉஎ


நொந்து வருந்தி, பானாட் கங்குலும் பகலும் - நடு இரவிலும் பகலிலும், ஆனாது அழுவோள் - ஒழியாது அழுதிருக்கும் நம் தலைவியின், ஆய் சிறு நுதல் - அழகிய சிறிய நெற்றி,

கக-௩. பசுநிலா விரிந்த பல்கதிர் மதியில் - குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய மதியைப்போலும், பெருநல் ஆய்கவின் ஒரீஇ - பெரிய சிறந்த ஆராயும் அழகு நீங்க, சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல் - சிறிய பீர்க்கினது பூவினை ஒத்த நிறம் கொண்டதோ.

(முடிபு) குன்ற வைப்பின் என்றூழ் நீளிடை, யாம் எமியமாக, வருந்திப் பெரிதழிந்து அழுவோள் சிறு நுதல் மதியின் கவின் ஒரி இப் பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று கொல்.

பேடை நீந்தி வந்து பெறாது உள்ளிப் பையாந்து ஏக்கற்ற நீளிடை என வும், இற்றி நெடுவீழ் துறுகற் றீண்டி யான நிவப்பிற் றூங்கும் நீளிடை எனவும் கூட்டுக.

(வி-ரை.) வாவுப்பறை கனி பெறாது என்ற குறிப்புக்களால் செங்காற் பேடை என்பது வாவற்பேடை யென்பது பெற்றாம்; வாவிப் பறத்தலின் இது வாவலெனப் பெயர் பெறுவதாயிற்று; இது வௌவால் எனவும் வழங்கப்பெறும். வாவல் கனிகளை விரும்பி யுண்பதென்பது, 1‘அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும், பொரி தாள் விளவினை வாவல் குறுகா', 2‘மரம் பழுத்தால் வௌவாலை வா வென்று கூவி, இரந்தழைப்பார் யாவருமிங் கில்லை ' என்பவற்றாலும், 3‘பளிக்கறைப் பவளப் பாவை' என்னுஞ் செய்யுளில், அஞ்சிறைப் பறவை என்பதற்கு வாவல் எனப் பொருள் கொண்டு, ' கண்ணாள் கனியை யொத்தாள், ... அயில்கின்ற வேந்தன் வாவலை யொத்தான்' என உரை கூறி யிருத்தலானும் பெறப்படும். ஏக்கறுதல் - ஆசையிற் றாழ்தல். ஒரீஇ - ஒருவ எனத் திரிக்க. கொல்-ஐயம். ஒ, அசை .



58. குறிஞ்சி


[சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.]


இன்னிசை உருமொடு கனை துளி தலைஇ
மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல் -
காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது
வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத்

ரு) தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை
கூதிரிற் செறியுங் குன்ற நாட
வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ்
சுற்ற நின்மார் படைதலின் இனிதா கின்றே


1. நாலடியார், உ௪க. 2, நல்வழி, ௩௦, சீவக. ககஉ,