பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௩௬

அகநானூறு

[பாட்டு


மலர் பிணைத்தன்ன - கரிய தண்டினையுடைய குவளையின் மலர்களை இணைத்து வைத்தாற் போன்ற, மா இதழ் மழைக்கண் மாயோளொடு-கரிய இமையினையுடைய குளிர்ந்த கரிய கண்களையும் உடையளு மாகிய அவளுடன்,

௬-கஉ. பேயும் அறியா மறையமை புணர்ச்சி - பேயும் அறியாத காலத்தே நிகழ்ந்துவந்த மறைவு அமைந்த புணர்ச்சியை, பூசல் துடியில் புணர்பு பிரிந்து இசைப்ப- ஆரவாரமுடைய துடியினைப்போல ஒருகால் இணைந்தும் ஒரு கால் தனித்தும் அயலோர் அலர் கூறலால், கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் - முன்பு போல் கரந்த ஒழுக்கத்தில் இனி நாம் செல்லுதற்கு அருமை எய்தினமையாற் போலும், கடும்புனல் மலிந்த காவிரிப் பேர் யாற்று - விரைந்தோடும் நீர் மிக்க காவிரி எனும் பேர் யாற்றில், நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல - நெடிது சுழலும் சுழிகளையுடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல, நெருநல் - நேற்று, நடுங்கு அஞர் தீர முயங்கி - உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, ஆகம் அடை தந்தோள் - ஆகத்திற் பொருந்திக் கிடந்தனள்.

(முடிபு) பொறையன் கொல்லியில் எழுதிய பாவையின் மாண்ட மாயோள், துவர்வாய் அரும்பிய முலையள் பணைத்தோள் மழைக்கண் மாயோளாகிய தன்னுடன் மறை அமை புணர்ச்சி, புணர்பு பிரிந்திசைப்ப, செலற்கு அருமையின், காவிரி நீத்தம் மண்ணுநள் போல, நெருநல் முயங்கி ஆகம் அடைதந்தோள். (அந்தோ இன்று அல்லகுறிப் பட்டோமே.)

(வி - ரை.) மாயோள் எனப் பின்னர் வருதலின், மழைக்கண் மாயோள் என்புழிக் கருமையைக் கண்ணிற்கு ஏற்றுக. பேயும் இயங்காத நள்ளிரவில் நிகழ்ந்ததாதலின் அஃது அறியாததாயிற்று. புணர்வு பிரிந்து எனப் பாடங் கொண்டு, புணர்ந்த காலத்து மேனி அழகாலும் பிரிந்த காலத்து மேனி வேறுபாட்டாலும் இசைப்ப என்றுமாம்; இப் பொருட்குப் புணர்வு பிரிந்து என்பவற்றைப் புணர்தல் பிரிதல் எனத் தொழிற் பெயராக்குக. நீத்தம் மண்ணுநள் போல முயங்கி - நீத்தத்திற் குளிக்குமிடத்துக் குளிருமாறு போலக் குளிர முயங்கி.

இச் செய்யுள் நச்சினார்க்கினியர் கருத்தின்படி, தலைவன் தோழியை இரப்பதாகும்.

(மே - ள்.) 1‘மெய் தொட்டுப் பயிறல்' என்னுஞ் சூத்திரத்து,' ‘களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்' என்பதனால் இச் செய்யுள், தலைவியாற் குறி பெற்றும் தலைவன் தோழியை இரப்பதாகும் என்றும், 2‘தன்னுறு வேட்கை' என்னுஞ் சூத்திரத்து, 'கடும்புனல் ... அடைதந் தோளே' என்பது, தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பால் உணர்ந்தது என்றும் கூறினர் நச்.




1. தொல். களவு, கக. 2. தொல், களவு. உஎ.