பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/140

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

63] களிற்றியானை நிரை ௧௩௭

     63. பாலை 

[தலைமகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல் லியது.]

கேளாய் வாழியோ மகளைநின் தோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி

ரு முடங்குதாள் உதைத்த 1பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்

க0 கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த २கடுங்கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை

கரு மடமயில் அன்னஎன் நடைமெலி பேதை தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே.

           - கருவூர்க் கண்ணம் புல்லனார். 

(சொ - ள்.) க. மகளை வாழியோ - மகளே ! வாழ்வாயாக, கேளாய்-,

க-௩.நின்.தோழி - நின் தோழியானவள், திரு நகர் வரைப்பு அகம் புலம்ப- அழகிய இல்லின் இடனெல்லாம் தனிமையுற, அவனொடு பெருமலை இறந்தது - அத் தலைவனுடன் பெரிய மலையைத் தாண்டி உடன்போயது பற்றி, நோவேன் - யான் வருந்துகின்றேனல்லேன்;

ச-௯. கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி - அஞ்சாமையை யுடைய யானை நீண்ட கையினை அணைத்து, முடங்கு தாள் உதைத்த - வளைந்த காலால் உதைத்துண்டாக்கிய, பொலம் கெழு பூழி - பொற்றுகள் எழும் புழுதியில், பெரும் புலர் விடியல் - பெரிய இருள் புலர்கின்ற விடியற்காலத்தில், விரிந்து வெயில் எறிப்ப- வெய்யில் மிகுந்து எறிக்க, கருந் தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் - கரிய மாலை போன்ற கழுத்தினை யுடைய சிவந்த குறும்பூழின் சேவல், சிறு புன் பெடையொடு - தனது சிறிய புல்லிய பெடையுடன், குடையும்

(பாடம்) 1. புலங்கெழு பூழி. 2. கடுங்கண் மறவர்,சரிபார்க்கப்பட்டது