பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪௬

அகநானூறு

[பாட்டு


க0) பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை 1வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎந் 2தருமார் மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவலிடு பதுக்கை ஆளுகு பறந்தலை

௧௫) உருவில் பேஎய் ஊராத் தேரொடு
நிலம்படு மின்மினி போலப் பலவுடன்
இலங்குபரல் இமைக்கும் என்பநம்
நலந்துறந் துறைநர் சென்ற ஆறே.

- 3நோய்பாடியார்.

(சொ - ள்.) க. தோழி - ,

கஎ-அ. நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு - நமது இன் பத்தைக் கைவிட்டுப் பிரிந்து போயிருப்பவர் சென்ற நெறி,

க-க௪. பொறி வரி வானம்வாழ்த்தி பாடவும் - புள்ளிகளையும் வரிகளையுமுடைய வானம்பாடிப்புள் பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின் - மேகம் அருள் செய்யாது துளிபெய்தலை நீத்து அகன்று போதலின், பறைபு உடன் மரம் புல் என்ற - மரங்கள் தம் இலைகள் யாவும் கெட்டொழிதலின் பொலிவற்றிருக்கும், முரம்பு உயர் நனந்தலை - கற்குவியல்கள் உயர்ந்துள அகன்ற இடமாகிய, நெல்லி நீளிடை - நெல்லி மரங்களையுடைய நீண்ட இடங்களில், எல்லி மண்டி - இருளிலே விரைந்து சென்று, அரம் போழ் நுதிய - அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய, வாளி அம்பின். பற்களையுடைய அம்பினையும், நிரம்பா நோக்கின் - இடுக்கிக் குறி பார்க்கும் பார்வையினையு முடையராய், நிரை அம் கொண்மார் - தம் நிரையை மீட்க வேண்டி, நல் அமர் கடந்த - வெட்சியாருடன் நிகழ்ந்த நல்ல போரினை வென்று பட்ட, நாணுடை மறவர்-மானம் மிக்க கரந்தை வீரர்களது, பெயரும் பீடும் எழுதி - பெயரினையும் சிறப்பினையும் பொறித்து, அதர்தொறும் - நெறிதோறும், பீலி சூட்டிய - மயிற்றோகை யணிந்த, பிறங்கு நிலை நடுகல் - விளங்கும் நிலை மேவிய நடுகல்லானவை, வேல் ஊன்று பலகை - ஊன்றிய வேலும், சார்த்திய பலகையுங் கொண்டு, வேற்று முனை கடுக்கும் - பகைவருடன் போர் செய்யும் முனைப் புலத்தை யொக்கும், மொழி பெயர் தேஎம் தருமார் - வேற்று மொழி வழங்கும் தேயத்தைக் கொள்ள வேண்டிச் செல்லும், மன்னர் - மன்னர்களது, கழிப்பிணிக் கறைத் தோல் நிரை கண்டன்ன - கழியாற் பிணிக்கப்பட்ட கரிய பரிசையின் நிரையினைக் கண்டாலொத்த, உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந் தலை . மரித்த ஆட்களை இட்டுத் தழைகளைக் கொண்டு மூடிய கற் குவியல்களையுடைய பாழிடத்தே,


(பாடம்) 1. வேற்று முனை கடந்து, 2. தருமார் மள்ளர். 3. நொய்ப்பாடியார்.