68
களிற்றியானை நிரை
௧௪௭
கரு-எ. உரு இல் ஊராப் பேய்த் தேரொடு - உரு இல்லாத ஊர்ந்திடப் பெறாத பேய்த் தேருடன், நிலம்படு மின்மினிபோல . நிலத்தே பொருந்திய மின்மினிப் புழுவைப்போல, பலவுடன் இலங்கு பரல் இமைக்கும் - விளங்கும் பரற்கற்கள் பலவும் ஒருங்கு ஒளிவிடும், என்ப - என்று கூறுவர்
க. யான் எவன் செய்கோ - யான் என் செய்வேனோ.
(முடிபு) தோழி! நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறு, பறந்தலையில் ஊராத் தேரொடு பரல் இமைக்கும் என்ப; யான் எவன் செய்கோ . எழிலி நீங்கலின் மரம் புல்லென்ற நனந்தலை நீளிடை எல்லி மண்டிக் கடந்த மறவர் பெயரும் பீடும் எழுதிப் பீலி சூட்டிய நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் தேஎம் எனவும், தேஎம் தருமார் மன்னர் தோல் நிரை கண்டன்ன பதுக்கைப் பறந்தலை எனவும் கூட்டுக.
(வி - ரை.) போழ்தல் - ஈங்கு அராவுதல், வாளி அம்பு - எயிற்றம்பு, நிரையம் : அம், அசை. நிரயம் கொண்மார் என்பது பாடமாயின், நரகம்புகுவார் என்றாதல், நரகத்தை அடைய வேண்டி என்றாதல் கொள்க. நிரை மீட்கும் போராதலின் 'நல்லமர்' என்றார். இது தன்னுறு தொழில். கடந்த - வென்று இறந்த என்றபடி. வேற்று முனை யிடத்தும் வேலும் பலகையும் உண்மையின் வேற்று முனை கடுக்கும் என்றார். வேற்று முனை கடந்து என்பது பாடமாயின், நடுகல் முதலியவற்றை யுடைய வேற்று முனையைக் கடந்து சென்ற ஆறு என இயையும். பதுக்கைகள் தோலின் நிரையை ஒக்கும் என்க. உருவில்லாத பேய் என்க. பேய்த்தேராகிய ஊராத்தேர் என்க; ஊராத் தேர், வெளிப்படை. நச்சினார்க்கினியர் இதனைத் தோழி கூற்றாகக் கொள்வர்.
(மே - ள்.) ‘நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் மண்டிலத் தருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது என்றார் நச்.
[தலைமகன் இரவுக்குறி வந்தமை யறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.]
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தண்ணயத் தமன்ற கூதளங் குழைய
இன்னிசை அருவிப் பாடும் என்னதூஉங்
கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை
௫) ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை
ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென
முழுமுதல் துமிய உருமெறிந் தன்றே
பின்னுங் கேட்டியோ எனவுமஃ தறியாள்
1. தொல். அகத். ச௪.