பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪௮

அகநானூறு

[பாட்டு



அன்னையும் கனைதுயில் மடிந்தனள் அதன்றலை

க0) மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவ ராயின் பருவம் இதுவெனச்
சுடர்ந்திலங் கெல்வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுதன் றாக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து

கரு) இமிழ்பெயல் தலைஇய இனப்பல கொண்மூத்
தவிர்வில் வெள்ளம் தலைத்தலை சிறப்பக்
கன்றுகால் ஒய்யும் கடுஞ்சுழி நீத்தம்
புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன்
வெண்கோட் டியானை விளிபடத் துழவும்

உ0) அகல்வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே.

-ஊட்டியார்.


(சொ - ள்.)க௪. தோழிவாழி.., (நான் நம் அன்னையை நோக்கி அவள் துயிலுதலை உணர்ந்து கொள்ள).

க-௪. அன்னாய் வாழி வேண்டு அன்னை - அன்னையே வாழ்வாயாக, அன்னையே நான் கூறுவதை விரும்பிக் கேட்பாக, நம் படப்பைத் தண் அயத்து அமன்ற - நம் தோட்டத்திலுள்ள குளிர்ந்த பள்ளத்தே நிறைந்த, கூதளம் குழைய - கூதளஞ் செடியின் தழைகளின் கண்ணே விழும், இன்னிசை அருவிப் பாடும் - இனிய இசையை யுடைய அருவி யொலியும், என்னதூஉம் கேட்டியோ - சிறிதேனும் கேட்டாயோ (எனவும்),

௬-அ. பின்னும் - மற்றும், வாழி வேண்டு அன்னை-, நம் படப்பை - நம் தோட்டத்திலுள்ள, ஊட்டி யன்ன ஒண் தளிர்ச் செயலை - அரக்கு ஊட்டினாற்போலும் ஒள்ளிய தளிரினையுடைய அசோகினது, ஓங்குசினைத் தொடுத்த - ஓங்கிய கிளையிற் கட்டிய, ஊசல் பாம்பென - ஊசற் கயிற்றினைப் பாம்பெனக் கருதி, முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே - (அம்மரத்தின்) பெரிய அடியும் துணிபட இடி வீழ்ந்தது, கேட்டியோ எனவும் - அதனை நீ கேட்டாயோ என்று கூறவும்,

அ- ௯. அஃது அறியாள் அன்னையும் கனை துயில் மடிந்தனள் - அக் கூற்றினை அறியாளாய் அன்னையும் மிக்க துயிலில் அழுந்தியுள்ளாள்;

௯- க0. அதன்றலை மன்னுயிர் மடிந்தன்றால் பொழுதே - அதன் மேலும் அந்நேரம் ஏனை உயிர்களும் துயிலப் பெற்றிருந்தது;

க0-௩. காதலர் வருவராயில் பருவம் இதுவென - நம் காதலர் வருவராயின் அதற்குரிய அமையம் இஃதாகுமென, சுடர்ந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்த நம்வயின் - வீட்டு விளங்கும் ஒளியுடைய வளை