பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

களிற்றியானை நிரை

௧௫௧


நன்கலந் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத்
தலைநாள் அலரி நாறுநின்

உ0) அலர்முலை ஆகத் தின்றுயில் மறந்தே.

- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்.


(சொ - ள்.) க௩. வாழி தோழி - ,

க-௪. நீ - , ஆய் நலம் தொலைந்த மேனியும் - ஆராயும் அழகு தொலைந்த மேனியினையும், மாமலர்த் தகைவனப்பு இழந்த கண்ணும் - கரிய மலரின் சிறந்த அழகினை இழந்த கண்ணினையும், வகை இல வண்ணம் வாடிய வரியும் - முன்னை யியல்பு இலவாய் அழகு வாடின திதலையையும், நோக்கி ஆழல் ஆன்றிசின் - நோக்கித் துயரில் அமுந் தாதேகொள்:

௪-௬. உரிதினில் ஈதல் இன்பம் வெஃகி - (நம் காதலர்) ஈதலால் எய்தும் இன்பம் தமக்கு உரிமையாக விரும்பி, மேவர - அது வந்துற, செய்பொருள் திறவராகி - செய்யும் பொருள் வகையராகி,

௬-௯. புல் இலை பரு அரை நெல்லி அம்புளித் திரள்காய் - சிறிய இலையினையும் பரிய அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காயினை, கானம் மடமரைக் கண நிரை கவரும் - கானத்தே யுள்ள இளைய மரைமானின் மிக்க கூட்டம் தின்னும், வேனில் அத்தம் என்னாது - வெம்மை மிக்க நெறி என்று நினையாது, ஏமுற்று - மயக்கமுற்று,

க0-௨. விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் - விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய மோரியர், பொன்புனை திகிரி திரிதர - தங்கள் பொன்னாலியன்ற உருள் (தடையின்றிச்) செல்ல, குறைத்த அறை இறந்து அகன்றனராயினும் - வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக் கடந்து சென்றாராயினும்,

க௩-௨௦. ஆடு இயல் மடமயில் ஒழித்த பீலி வார்ந்து - ஆடும் இயல் வாய்ந்த இளைய மயில் நீக்கிய தோகையை உரித்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி - தமது ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பல மாண் அம்புடைக் கையர் - பலவாகிய மாட்சியுற்ற அம்புடைய கையினராய், அரண் பல நூறி - பகைவர் அரண்கள் பலவற்றை அழித்து, நன் கலம் தரூஉம் - நல்ல அணிகலன்களைக் கொணரும், வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்து - வீரர்களது பெருமானாகிய சுடரும் மணிகள் பதித்த பெரும் பூணினை அணிந்த ஆய் என்பானது காட்டில், தலை நாள் அலரி நாறும் - அன்றலர்ந்த மலரென மணக்கும், நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்து - நினது பரந்த முலையினையுடைய மார்பின்கண்ணே துயிலும் இனிய துயிலினை மறந்து,

கஉ-௩. எனையதும் நீடலர் - சிறிதும் தாழ்த்திரார்.