பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4]களிற்றியானை நிரை௧௩

 

கொன்றை மென்பிணி அவிழ = தேற்றா மரத்தின் முகையொடு பசிய அடியினையுடைய கொன்றை மரத்தின் முகைகள் மெல்லிய கட்டு நெகிழ்ந்து விரியவும், இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பிற் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப = இரும்பை முறுக்கிவிட்டாற் போலும் கரிய பெரிய கொம்பினையுடைய ஆண் மான்கள் பரல்களையுடைய பள்ளங்களிலெல்லாம் துள்ளிக் குதிக்கவும், மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப = அகன்ற காடுறை யுலகில் நீரில்லாத வருத்தம் விட்டொழியவும், கருவி வானம் கதழ் உறை சிதறி கவின் பெறு கானம் கார் செய்தன்று = மின் முதலியவற்றின் தொகுதியையுடைய மேகம் விரைந்து வீழும் துளிகளைச் சிதறி அழகிய அக் காட்டினைக் கார்ப்பருவம் செய்தது;

௧௩-௭. குறும் பொறை நாடன் = குறிய மலைகளையுடைய நாட்டினையுடைய தலைவன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது = கீழ்பாலுள்ளதாகிய, நெடும் பெரும் குன்றத்து = நீண்ட பெரிய மலையின் கண்ணே, அகன்ற காந்தள் போதுஅவிழ் அலரின் நாறும் நின் மாண்நலம் படர்ந்து = நெருங்கிய காந்தளின் போது விரிந்த மலரென நாறும் நினது சிறந்த அழகினை நினைந்து,

௮-௧௩. குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி = வளைந்த தலையாட்டத்தாற் பொலிந்த கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகள், வாங்கு வள்பரிய = இழுக்கும் கடிவாளம் நெகிழ (விரைந்து ஓட), பூத்த பொங்கர் துணையொடு வதிந்த = பூத்த சோலையில் பெடையொடு தங்கும், நரம்பு ஆர்த்தன்ன தாது உண் பறவை = யாழின் நரம்பு ஒலித்தாலொத்த ஒலியினையுடைய தேனை யுண்ணும் வண்டுகள், பேதுறல் அஞ்சி = மயங்குமென அஞ்சி, மணிநா ஆர்த்த மாண் வினைத் தேரன் = மணிகளின் நாவை ஒலியாமற் கட்டிய மாண்புற்ற தொழிலமைந்த தேரினை யுடையனாய், உவக்காண் தோன்றும் = உவ்விடத்தே தோன்றும்.

(முடிபு) அரிவை! கானம் கார்செய்தன்று; குறும்பொறை நாடன் மாண் நலம் படர்ந்து தேரனாய் உவக்காண் தோன்றும்.

தோன்ற, அவிழ, தெறிப்ப, புறக்கொடுப்ப, வானம் உறை சிதறிக் கானத்தைக் கார் செய்தன்று என்க. மருப்பின் இரலை எனவும், அவலடையத் தெறிப்ப எனவும், நரம்பார்த்தன்ன பறவை எனவும், புரவி வள்பரிய (விரைதலால்) அஞ்சி மணி நா ஆர்த்த எனவும், நாடன் நலம் படர்ந்து தோன்றும் எனவும் கொண்டு கூட்டுக.

(வி-ரை. 'நுனை' என்றது நுனையையுடைய மொட்டை. இல்லம் கொன்றை என்பன அவற்றின் சினையாகிய அரும்பை யுணர்த்தி நின்றன. மாயிரு: யகர வுடம்படுமெய் பெற்றது 1'கிளந்தவல்ல' என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்க. குரங்கல் - வளைதல்; 'கிளைவிரி சுரும்பின் கணைக்கால் வான்பூ - மாரியங் குருகி னீரிய


1.தொல். குற்றிய. ௭௮.