பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௫௮

அகநானூறு

[பாட்டு


நீயும் தவறுடையை யல்லை; நின் வயின் ஆனா அரும்படர் செய்த - நின் பால் நீங்காத அரிய துன்பினை யாக்கிய, யானே தவறுடை யேன் - யானே தவறுடையவள் ஆவேன்.

(முடிபு) ஆறு அரு மரபின; யாறு முதலைய; அஞ்சுவம் தமியம் என்னாது கல்லடர்ச் சிறுநெறி வந்தோன் கொடியனுமல்லன் ; நீ தவறுடையையும் அல்லை ; யானே தவறுடையேன்.

(வி - ரை.) கொல் - கொற்சாதி; கொல்லனை உணர்த்திற்று. ஆங்கண், அசையுமாம். யாறு, இரங்க முதலைய எனக் கூட்டுக. இரங்க என்னும் செயவென் எச்சம் முதலைய என்னும் முற்றுவினைக் குறிப்புடன் முடியும். தன்னுயிரோடு கருவிலிருக்கும் உயிரையு முடைமையின் ஈருயிர்ப் பிணவு என்றார். வயவு - கருவுற்றிருக்குங் கால் உளதாம் வேட்கை. நாம, உரிச்சொல் ஈறு திரிந்தது. நல்லரா . பெயர். புலர - புலால் நாற என்றுமாம். கவலையிலும் சிறு நெறியிலும் வந்தோன் எனலுமாம்.

(உ - றை.) “புலி துணை புறந்தருதற்குப் பிறவற்றைத் தீங்கு செய் யும் பாம்பும் அதற்குத் துணையாயினாற் போல, நீயுங் குடியோம்பற் செய்தி காரணமாக வரைவொடுவரிற் கடுஞ் சொற் சொல்லுகிற பேரும் இன் சொற் சொல்லி வரைவுடம் படுவர் என்பதாம்."

(மே - ள்.) 1'மறைந்தவற் காண்டல்' என்ற சூத்திரத்து, 'வந்தவன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறியதற்கு, வாணடந்தன்ன . . . தவறுடையேன்' என்பதனை எடுத்துக் காட்டினர் இளம்.

2'பொழுது மாறும்' என்னுஞ் சூத்திரத்து தன்னை அழிதலும்' என்னும் பகுதிக்கு, ' நீதவறுடையையும் . . . தவறுடையேனே' என்பதனை எடுத்துக்காட்டி, அவன் வரவினை உவவாது துன்பங் கூர்தல் வழுவாயினும், அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார் என்றுரைத்தனர் நச்.



73. பாலை


[தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவவரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது.]


பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ
வெருகிருள் நோக்கி அன்ன கதிர்விடு
பொருகாழ் முத்தம் இடைமுலை விளங்க

ரு) அணங்குறு கற்பொடு மடங்கொளச் சாஅய்
நின்னோய்த் தலையையும் அல்லை தெறுவர
என்னா குவள்கொல் அளியள் தானென


1. தொல். கள, உக. 2. தொல். பொருளி, க௬.