பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

களிற்றியானை நிரை

௧௬௧


கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே.

--மதுரைக் கவுணியன் பூதத்தனார்.

(சொ - ள்.) கச -எ. அல்கல் புன் கண் மாலையொடு பொருந்தி - நாடோறும் வருத்தத்தைத் தரும் மாலைப் பொழுதுடன் கூடி, கொடுங்கோல் கல்லாக் கோவலர் ஊதும் - வளைந்த கோலினை யுடைய தம் தொழிலன்றிப் பிறதொழிலைக் கல்லாத ஆயர் ஊதும், வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக்கால் - வலிய வாயினையுடைய சிறிய குழல் வருத்தாதொழியின்,

௩-அ. தண் பெயல் பொழிந்த பைதுறு காலை - குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே, குருதி உருவின் ஒண் செம் மூதாய் - குருதியைப் போலும் சிவந்த நிறத்தினை யுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி, பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப - பெரிய வழிகடோ றும் பல சிறிய வரிகளாகப் பரக்க, பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ நன்பல - பசிய முல்லைக் கொடியின் மெத்தென்ற செவ்வியை யுடைய மென்மைப் பதம் வாய்ந்த நன்றாகிய மிகப்பல புதிய மலர் கள், வெண் களர் அரிமணல் தாஅய் - வெள்ளிய களர் ஆகிய அறல் பட்ட மணலில் தாவிக் கிடப்ப, வண்டு போது அவிழ்க்கும் தண்கமழ் புறவில் - வண்டுகள் அரும்பினை மலர்த்தும் தண்ணிய கமழும் முல்லை நிலத்தில்,

௯ - க0. கருங்கோட்டு இரலை - கரிய கொம்பினையுடைய ஆண் மானினது, காமர் மடப்பிணை மான் மருண்ட நோக்கம் காண்டொறும் - அழகிய இளைய பெண்மானின் மருட்சியுற்ற பார்வையினைக் காணுந்தோறும், நின் நினைந்து - நின்னை எண்ணி,

௧-௨. வினை வலம்படுத்த வென்றியொடு - வினையை வெற்றியுறச் செய்த மேம்பாட்டுடன், மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு, போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்த - போரில் வல்ல வீரர் தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்திவர,

கக-௪. வலவ திண்தேர் கடவு எனக் கடைஇ - பாகனே திண்ணிய தேரினை இன்னும் விரைந்து செலுத்துவாயாக எனக் கூறிச் செலுத்திக்கொண்டு, இன்றே வருவர் - இன்றே (நம் தலைவர்) வந்துறுவர், ஆன்றிகம் பனி என - நாம் நடுக்கத்தை அமைவேம் என்று கூறும், வன்புறை இன்சொல் நன் பல பயிற்றும் - வன்புறையாகிய பல இனிய நல்ல சொற்களைக் கூறி வரும், நின் வலித்து அமைகுவன் - நின் சொல்லைத் துணிந்து அமைந்திருப்பேன், மன் - அது மாட்டுகி லேன்.

(முடிபு) (தோழி,) அல்கல் மாலையொடு பொருந்திக் கோவலர் ஊதும் குழல் வருத்தாக்கால், (தலைவர்), 'புறவில் இரலை மடப்பிணை நோக்கம் காண்டொறும் நின் நினைந்து, திண்டேர் கடைஇ, இன்றே வருவர் ஆன்றிகம் பனி' யென வன்புறை பயிற்றும் நின் வலித்தமைகுவன் மன்னோ.

இளையர் வாழ்த்த இன்றே வருவர் எனக் கூட்டுக.