பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௬௪

அகநானூறு

[பாட்டு


(வி - ரை.) ஆள்வினை - பொருளீட்டும் முயற்சி. அருள் பொருளன்றாக. ஆள் வினையே பொருளாக வலித்த என்க. 1'ஆங்கவை யொருபாலாக' என்னுஞ் சூத்திரத்து, 'அருளல் என்பது, மக்கள் முதலிய சுற்றத்தாரை அருளல்' என்றார் பேராசிரியர். பிரிவினால் தனக்கு வரும் ஏதங் குறித்து இரங்காமையின், அருளன்றாக எனத் தலைவி கூறினாள். இக் கருத்து, 'பொருளே காதலர் காதல், அருளே காதலர் என்றி நீயே' (ரு௩) என முன்னர் இந் நூலுள்ளும், 2'பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற வாருமில் லதுவே' எனக் குறுந்தொகையுள்ளும் வந்துள்ளமையுங் காண்க. சினம் - நெருப்பு; ஆகுபெயர். கரிகுபு என்னும் எச்சம் கரிகு என விகாரப்பட்டது. கரிந்த குதிர் போலும் என்றுமாம். 'தாரிடைக் குழையாது' என்பது இடக்கரடக்கு. 'அவரே பிரியச் சூழ்தலும்' என்றும் பாடம் உளது. இதற்குத் தலைவர் நின்னைப் பிரியக் கருதலும் உண்டோ வென்று தோழி சொல்லியதாக உரைக்க. இதற்கேற்பக், கருத்தினும், தலைமகட்குப் பிரியாரெனத் தோழி சொல்லியது என்ற பாடமும் உளது. அகநானூற்றுக் குறிப்புரையாசிரியர், யானே பிரியச் சூழ்தலும் உண்டோ என்ற பாடத்திற்கே, 'நின்னி டத்தினின்றும் அவர் பிரிய, அவரொடு யான் விசாரிப்பதுண்டோ' எனத் தோழி கூற்றாக்கி வலிந்து பொருள் கூறியுள்ளனர்.



76. மருதம்


[தலைமகனை நயப்பித்துக்கொண்டா ளென்று கழறக் கேட்ட பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.] -


மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
தண்டுறை ஊரனெம் சேரி வந்தென
இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றெடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை

௫) அவைபுகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்பவவன் பெண்டிர் அந்தில்
கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென

க0) ஆதி மந்தி பேதுற் றினையச்
சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும்
அந்தண் காவிரி போலக்
கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே.

- -- பரணர்.

(சொ - ள்.) க-உ. மண் கனை முழவொடு மகிழ்மிகத் தூங்க - மார்ச்சனை செறிந்த மத்தளத்தொடு (காண்பார்க்கு) மகிழ்ச்சி மிக


1. தொல். மெய்ப், கஉ. 2. குறுந். கஎ௪. (பாடம்,) 3. காணீரோ.