பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௪அகநானூறு[பாட்டு

 

குரங்க' (௨௩௫) எனப் பின்னரும் வந்துளது. 1'குரங்கமை யுடுத்த மரம்பயில் அடுக்கத்து' என்றார் இளங்கோவடிகளும். புரவியினது வாங்கு வள், நரம்பார்த்தன்ன பரிய எனக்கொண்டு கூட்டினர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்; வார், நரம்பு போலச் சிறிது ஒலிக்கும் என்பதும், அதனை ஆர்த்திலன் என்பதும் அவர்தம் கருத்தாகும். அஞ்சி : அருள் காரணமாகத் தோன்றும் அச்சம். துணையொடு வதியும் வண்டு பிரிந்து வருந்துதற்கும் அஞ்சுவான் தலைவனாகலின் அவன் நின்னைப் பிரிந்திருக்க ஒருப்படான் என்பது குறிப்பு.

தாதுண் என்ற அடையால் பறவை வண்டாயிற்று. உவக்காண், உவ்விடத்தே, உங்கே. 2'உவக்கா ணெங்காதலர்' என்புழி, உவக்காண் என்பதற்கு, 'உங்கே' எனப் பொருளும், 'ஒட்டி நின்ற இடைச் சொல்' என இலக்கணமும் பரிமேலழகர் எழுதினமை காண்க. குன்றம் - சிராப்பள்ளி மலை.

(மே-ள்.) செய்யுள் உறுப்பினுள் ஒன்றாகிய 3நோக்கு என்பதற்குப் பேராசிரியர் இச் செய்யுளை எடுத்துக் காட்டித் தம் நுண் மாண் நுழை புலந் தோன்றக் கூறியிருக்கும் உரை ஈண்டு அறிந்தின்புறற் பாலது. 'இனி அடிநிலை காறும்' என்றதனாற் செய்யுள் முழுவதும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும். முல்லை யென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற்சொல் லியலால் யாப்பு வழிப்பட்டதாயினும் பருவங் காட்டி வற்புறுக்கும் தோழி பருவந் தொடங்கிய துணையே காண் என்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்; 'உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன்' என்னுந் துணையும் தலைமகனது காதன் மிகுதி கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணர வைத்தான் எனப்படும்; என்னை?

முல்லை யென்னாது 'வைந்நுனை' என்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனை யாகாது மெல்லென்னு மாகலின், இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணி யவிழ்ந்தன வென்றான், முல்லைக் கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது, முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பம் தணிந்தில, இரும்பு முறுக்கி விட்டவழி வெப்பம் மாறா(விட்ட)வாறு போல வெம்பா நின்றன இன்னும் என்றவாறு. 'பரலவ லடைய இரலை தெறிப்ப' எனவே, பரல் படு குழிதோறும் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தின வாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரலவலினது அடைகரை விடாது துள்ளுகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை கூறியவாறாயிற்று. 'கருவி வானம் கதழுறை சிதறி' என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகம் தமது வீக்கத்திடைக்


1. சிலப். ௧௦:௧௫௭. 2. குறள்.௧௧௮௫. 3. தொல். செய். ௧௦௪.