பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

களிற்றியானை நிரை

௧௬௭


ணும் குடி பதிப் பெயர்ந்த - எவ்விடத்தும் குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற் கேதுவாய, சுட்டு உடை முது பாழ் - பலரும் சுட்டிக் கூறும் மிக்க பாழிடமாகிய பாலையில்,

எ-அ. கயிறு பிணிக்குழிசி - கயிற்றாற் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள, ஓலை கொண்மார் - ஓலையை எடுத்துக் கோடற்கு, பொறி கண்டு அழிக்கும் - அக் குடத்தின்மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும், ஆவண மாக்களின் - அவ்வோலையைத் தேரும் மாக்கள் அவை யிற்றை வெளியே ஈர்த்தெடுத்தல் போல,

௯- கக. உயிர் திறம் பெயர - தம் உயிர் வேறொரு நற்பதவியிற் புக, தெறுவர நல் அமர்க் கடந்த - மாற்றாரஞ்ச நற்போரை வென்று பட்ட, தறுகணாளர் குடர் - அஞ்சா வீரரின் குடரை, செஞ்செவி எருவை - சிவந்த செவியினையுடைய பருந்து, அஞ்சுவர - கண்டார் அஞ்சுமாறு, தரீஇ இகுக்கும் - வாங்கிப் போகடும்,

கஉ-௪. கல் அதர்க் கவலை போகின் - கற்களையுடைய கவர்த்த நெறியிற் போயின், சீறூர் புல் அரை இத்தி புகர் படு நீழல் - ஆங்குள்ள சீறூர்களின் பாங்கர்ப் புல்லிய அடியினையுடைய இத்தியின் புள்ளி பட்ட நிழலிலே, எல்வளி அலைக்கும் - பெருங் காற்று அலைக்கும், இருள் கூர் மாலை - இருள் மிக்க மாலைப் பொழுதில்,

கரு-கூ. வானவன் மறவன் - சேரன் படைத்தலைவனாகிய, வணங்கு வில் தடக்கை - வளைந்த வில்லைப் பெரிய கையிற்கொண்ட, ஆனா நறவின் வண் மகிழ்ப் பிட்டன் - அமையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பான், பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த - பகை மன்னரது அரிய போரில் எடுத்த, திருந்து இலை எஃகம் போல - திருந்திய இலைத் தொழிலையுடைய வேல் போல, இவள் பனி வார் கண் - நம் தலைவியது நீர் ஒழுகும் கண்கள் (தோன்றி), அருந் துயர் தரும் - அரிய துயரினைத் தரும் ஆதலால் என்க .

(முடிபு) நெஞ்சே வாழிய! நீ ஆள்வினை தரீஇயர் கானம் துன்னுதல் நன்றெனச் சூழ்ந்தனையாயின், இன்னாச் சூழ்ந்திசின் ; (எதனாலெனின்), முது பாழாகிய கவலையைக் கடந்து செல்லுங்கால் மாலையில், இவள் பனிவார்கண் தோன்றிப், பிட்டன் பொருந்தா மன்னர் சமத்து உயர்த்த எஃகம் போல அருந்துயர் தரும் ஆத லால் என்க.

குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டழிக்கும் ஆவணமாக்களின், எருவை தறுகணாளர் குடர் தரீஇ இகுக்கும் கவலை என்க.

(வி - ரை.) தரீ இயர் - பொருள் தரீஇயரென விரித்துரைக்க. சூழ்தலோடு தன்னைத் தூண்டுதலுங் கருதிப் பின்னின்று சூழ்ந்தனையாயின் என்றான். பின்னின்று - உடன் நின்று என்றுமாம். நன்றெனக் கூறிப் போந்து அதனாலாம் ஏதத்தைப் பின்னின்று ஆராய்வாயாயின் என்றுரைத்தலுமாம். நீங்கி - நீங்கலால் எனத் திரிக்க. சுட்டுடை முதுபாழ் - பலராலும் சுட்டப்படுதலுடைய பாழ் என்க. பாழாகிய கல்லதர்க் கவலை எனக்கூட்டுக. 'கயிறு பிணிக் குழிசி