பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௭௦

அகநானூறு

[பாட்டு


யையும் கைவண்மையையுமுடைய பாரியின், தீம் பெரும் பைஞ்சுனை பூத்த- இனிய பெரிய பசிய சுனைக்கட் பூத்த, தேம் கமழ் புதுமலர் நாறும் இவள் நுதல் - தேன் மணக்கும் புதிய மலரென மணக்கும் இவளது நெற்றியினை,

க௩-௪. சிறிதும் உள்ளியும் அறிதிரோ - சிறிதளவேனும் நினைத்தறிந்தீரோ.

(முடிபு) மலை நாட! ஆளி யஞ்சி, ஒருத்தல் தழுவவும் மடப்பிடி நடுங்கும் சாரலிடத்துக் குறவர் முன்றிலில் வாடை தூக்கும் அற்சிரம், நம்மில் புலம்பில் அளியர் என் ஆகுவர் கொல் என, பாரியின் சுனைபூத்த புதுமலர் நாறும் இவள் நுதலைச் சிறிதும் உள்ளியும் அறிதிரோ.

(வி - ரை.) இனம் தலை : இங்குத் தலை அசையுமாம். எறுழ் முன்பு : ஒருபொரு ளிரு சொல். மிஞிறு என்பது ஞிமிறு என்றாயிற்று. கடுஞ்சூல் - முதற் கரு. 1'நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்' என்பது காண்க, தேம்பிழி நறவு - தேனாற் பிழிந்த நறவுமாம். துடுப்பு - துடுப்புப் போறலின் பூவிற்கு ஆகுபெயர். நம்மில் - நாம் இல்லாத என்க. 'வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று, செழுஞ்செய் நெல்லின் விளை கதிர் கொண்டு, தடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி' என்றது, தமிழ் நாட்டு மூவேந்தரும் பாரியின் பறம்பரணை முற்றியிருப்ப, அரணிலுள்ளார் உணவின்றி வருந்தாவாறு, கபிலர் கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவர விட்ட வரலாற்றை உணர்த்தியவாறு. 2'பாரி பறம்பின், நிரைபறைக் குரீஇயினம் காலைப் போகி, முடங்குபுறச் செந்நெற் றரீஇய வோராங், கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபட, படர்கொள் மாலைப் படர்தங் தாங்கு' என இவ்வரலாறு ஒளவையாராலுங் கூறப்பட்டுளது. மலரொடு கூட்டி என்பதன் பின், அட்டு உண்பித்து என வருவித்துரைக்க. பிழையா, ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம், வேங்தர் ஓட்டிய 'என இரண்டனுருபு உயர்திணை மருங்கிற் றொக்கு நின்றது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க.

(உ - றை.) 'நனந்தலை . . . மடப்பிடி நடுங்கும்' என்றது, ' யானை காக்கவும் பிடி நடுங்கினாற் போல, நீயிர் இவளைப் பாதுகாக்கவேண்டு மென்னுங் கருத்துடையரா யிருக்கவும், பிரிவிற்கு அஞ்சா நின்றாள் என்றவாறு.'



79. பாலை


[பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்து
கல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில் '
பாருடை மருங்கின் ஊறல் மண்டிய


1. ஐங்கு . ௩௦௬. 2. அகம், ௩௦௩.