பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



79

களிற்றியானை நிரை

௧௭௧


ரு) வன்புலம் துமியப் போகிக் கொங்கர்
படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்
அகலரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்ப

௧௦) வல்லாங்கு வருது மென்னா தல்குவர
வருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை
ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்
கொடுவில் எயினர் கோட்சுரம் படர

கரு) நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடைக்
கல்பிறங் கத்தம் போகி
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே.

-- குடவாயிற் கீரத்தனார்.

(சொ - ள்.) கக. வாழி என் நெஞ்சே ',

கக-எ. ஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடி - ஆடுந் தோறும் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய துடியினையும், கொடுவில் எயினர் கோள் சுரம் படர - வளைந்த வில்லினையு முடைய மறவர் (பகைவரை வளைத்துக்) கொள்ளும் சுரத்தின் கட் செல்ல, இரும் சிறை வளைவாய்ப் பருந்தின் வான் கண் பேடை - பெரிய சிறையினையும் வளைந்த வாயினை யுமுடைய பருந்தின் வெள்ளிய கண்ணினை யுடைய பேடை., நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடை - (தன் துணையினை நோக்கி) நெடுங் கூப்பீடு செய்யும் செல்லத் தொலையாத நீண்ட இடமாய, கல் பிறங்கு அத்தம் போகி - கற்கள் விளங்கும் காட்டில் நடந்து, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீ - நிலை நில்லாத பொருளின் மேலுள்ள பற்றினால் பிரிதலுற்ற நீ,

க-௯. தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர் - தோளிலே தொங்கவிடும் சோற்று முடியைக் கோத்த வலிய கையினையுடைய ஆடவர்கள், வினைப்படர்ந்து - (கிணறு வெட்டும்) தொழிலிற் புக்கு, கனை பொறி பிறப்ப நூறி - மிக்க தீப் பொறி யுண்டாகப் பாறைகளை வெட்டி, கல்லுறுத்து இயற்றிய - கல்லுதல் செய்து அமைத்த, வல் உவர்ப் படுவில் - மிக்க உவரையுடைய கிணற்றில், பாருடை மருங் கின் ஊறல் மண்டிய - பாரினை உடைத்த பக்கத்தே ஊறிய நீரை உண்ணவேண்டி, நீர்க்கு நிமிர்ந்து செல்லும் - நீர் பருகக் கலித்துச் செல்லும், கொங்கர் படு மணி ஆயம் சேதா - கொங்கரது ஒலிக்கும் மணி பூண்ட ஆயமாகிய செவ்விய ஆக்கள், வன் புலம் துமியப் போகி-வன்னிலங்கள் துணிபடச் சென்று, எடுத்த செந்நிலக் குரூஉத் துகள் - கிளப்பிய செம்மண்ணாகிய நிறம்பொருந்திய புழுதி, அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் - அகன்ற - பெரிய வானின்கண் மிக்குத் தோன்றும், நனந்தலை அழுவம் - இடமகன்ற காட்டில்,