பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90]

களிற்றியானை நிரை

௧௯௧/191


தேன் கலந்தற்றே' என்பது முதலியவற்றான் அறியப்படும். தேன் கலந்த பாலைத் தானும் அச்சுறுத்தி ஊட்டவும் உண்ணாது ஓடுபவள் என அவளது செல்வச் சிறப்புக் கடறியவாறு. செல்வச் சிறாரும் சிறுமியரும் உணவுண்ண மறுக்குங்கால், உண்பிக்கும் தாயர் அவர்கட்கு இனிய கதைகள் கூறியும் அச்சுறுத்தியும் உண்பித்தல் இயல்பு என்க.



90. நெய்தல்


[பகற்குறி வந்து கண்ணுற்று நீங்குந் தலைமகனைத் தோழி எதிர்ப் பட்டு நின்று இற்செறிப் பறிவுறீஇயது.]



மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி
இளையோ ராடும் வரிமனை சிதைக்கும்
தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச்
சில்செவித் தாகிய புணர்ச்சி அலரெழ

ரு) இல்வயின் செறித்தமை அறியாய் பன்னாள்
வருமுலை வருத்தா அம்பகட்டு மார்பில்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்வயின்
நீங்கு கென்றியான் யாங்ஙனம் மொழிகோ
அருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது

க0) பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
1கடுங்கண் கோசர் நியமம் ஆயினும்
உறுமெனக் கொள்ளுநர் அல்லர்
நறுநுதல் அரிவை பாசிழை விலையே.

-மதுரை மருதனிளநாகனார்.


(சொ - ள்.) க-அ. தலைவ, மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி - முதியோரை ஒத்த வெள்ளிய தலையையுடைய கடல், இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் - இளைய மகளிர் விளையாடும் வண்டல் மனையினை அழிக்கும், தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந்துறை - கட்டவிழ்ந்த மடல்கள் பொருந்திய தாழைகளையுடைய சோலை பொருந்திய பெரிய கடற்றுறைக்கண்ணே, சில் செவித்தாகிய புணர்ச்சி - சிலர் செவிப்பட்ட மாத்திரையாகிய கூட்டம், அலர் எழ - அலராகி எங்கும் பரவ, இல்வயின் செறித்தமை அறியாய் - தாய் தலைவியை இல்லிடத்தே செறித்தமையை அறியாயாகி, பல் நர்ள் - பல நாளும், அம் பகட்டு மார்பின் - நினது அழகிய பெருமையையுடைய மார்பினால், வருமுலை வருத்தா- வளரும் முலையினை யுடையாளை வருத்தி, தெருமரல் உள்ளமொடு வருந்தும் - கலங்கும் உள்ளத்தோடு வருந்தா நிற்கும், நின்வயின் - நின்னிடத்தே, நீங்குக


(பாடம்) 1. கருங்கண்.