பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௯௮

அகநானூறு

[பாட்டு


கசு. முயங்குகம் சென்மோ - நாம் முயங்குவோம் வருவாயாக.

(முடிபு) நெஞ்சே! ஊன்றவும், ஆரவும், ஒழுகவும் வேண்டி, ஊக்கமொடு புகல் சிறந்து, உறந்தை யன்ன நன்கலன் எய்திச் செய்வினை முற்றினம் ஆதலால், மாயோளொடு மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளியில், சுடர் விளக்கத்து, ஆன் பொருநை மணலினும் பல ஆகம் வடுப் பொறிப்ப முயங்குகம் சென்மோ.

(வி - ரை,) கேள் - கேளிர் என்னும் பொருட்டு. ஊன்றல் - தாங்கல். வறுமையுற்ற கிளைஞர் ஆரவும் என்க. கேள் அல் கேளிர் - ஏதிலார். அவர் அன்புடையராய் ஒழுகவும் என்றபடி. 1'ஆரும் வெதிரும் சாரும் பீரும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்' என்னும் சூத்திரத்து, மெய்பெற என்ற இலேசால் ‘ ஆரங் கண்ணி' என அம்முப்பெற்றது. உறையூர் அவையில் அறம் நிலை பெற்றதென்பதனை, 2'மறங்கெழு சோழர் உறந்தை யவையத் - தறங்கெட வறியா தாங்கு' 3'மறங்கெழு சோழர் உறந்தை அவையத், தறம் நின்று நிலையிற் றாகலின்' என வருவனவற்றானும் அறிக. முற்றி எய்தினம் என்று மாறுதலுமாம். ' எய்திய' எனப் பாடங்கொண்டு, எய்துதற்கென்று உரைப்பாரு முளர். ஆயின் - ஆதலால். மீளி - கூற்றுவன் ஆதலை 4'மீளி யுடம்பிடித் தடக்கை' என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் உணர்க. மீளி - மறமுமாம். மதங் கொண்ட யானை கையை நிலத்தின்கண் எறிந்து வரும் என்பது, 5'இரும்பிணர்த் தடக்கை யிருநிலம் சேர்த்திச், சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு, மையல் வேழம் மடங்கலின் எதிர்தர' என்பதனால் அறியப்படும். கருவூர் மேல் கடற் பக்கத்தது என்பாரும், சோழ நாட்டின் எல்லையை அடுத்துள்ள கொங்கு நாட்டுக் கருவூரே என்பாரும் என இருதிறப்படுவர் வரலாற்று ஆராய்ச்சியாளர். இச் செய்யுளுள் சோழர், பாண்டியர், சேரர் என் னும் மூவேந்தரும், அவர் தலைநகராகிய உறந்தை , கூடல், கருவூர் என்பனவும் வந்துள்ளமை அறியற்பாற்று.

(மே-ள்.) 6'மேவிய சிறப்பின்' என்னுஞ் சூத்திரத்து, 'கேள்கே டூன்றவும் . . . புகல் சிறந்து' என்பது, 'வணிகர் பொருள் வயிற் பிரிந்தவாறு' என்றும், 7'புறத்திணை மருங்கின்' என்னுஞ் சூத்திரத்து, இப்பாட்டு, 'புறத்திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவி வந்தது' என்றும், 8'கரணத்தினமைந்து' என்னுஞ் சூத்திரத்து கேள்கே டூன்றவும் கிளைஞ ராரவும்' என்பது, அவ்வழிப் பெருகிய சிறப்பு' என்றும் கூறுவர் நச்.

9'பிறப்பே குடிமை' என்னுஞ் சூத்திரத்து, கேள்கே டூன்றவும் . . , புகல் சிறந்து' என்புழி இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினை முடித்தனமாயினும், அவளை 'முயங்குகம் சென்மோ ' என்றமையின் தன்


1. தொல். எழுத். புள்ளி . ௬அ. 2. நற். ௪௦௦. 3. புறம். ௩௬. 4. பெரும் பாண்.எ௫. 5. குறிஞ்சி. க௬௩ -ரு அடிகள், 6. தொல். அகத். உ௮. 7. தொல். அகத். ரு௫. 8. தொல். கற்பு. ௫. 9. தொல். மெய்ப். உரு.