பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95]

களிற்றியானை நிரை

௨௦௧/201




95. பாலை


[போக்குடன் பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]


பைபயப் 1பசந்தன்று நுதலுஞ் சாஅய்
ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்கொடு கழியின் அல்லதை நினையின்
ரு) எவனோ வாழி தோழி பொரிகால்

பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
க௦) 2சுரம்பல கடந்தோர்க் கிரங்குப என்னார்

கௌவை மேவல ராகி இவ்வூர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ
நம்முணர்ந் தாறிய கொள்கை
கரு) அன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.

-- ஒரோடோகக்துக் கந்தரத்தனார்.

(சொ - ள்.) க-ரு, தோழி வாழி -, பைபயப் பசந்தன்று நுதலும் - என் நெற்றியும் மெல்ல மெல்லப் பசந்தது, சாஅய் ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் - தளிரை யொத்த என் மேனியும் நுணுகி மெல்லிதாகின்றது, பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் - என் துயரமும் பலரும் அறியும்படி விளங்கித் தோன்றும், உயிர் கொடு கழியின் அல்லதை - இவை என் உயிரைக் கொண்டு போவதல்லது, நினையின் எவனோ - ஆயுமிடத்து வேறு என் செய்வன :

ரு-க0. பொரி கால் பொகுட்டு அரை இருப்பை - பொரிந்த அடியினையும் கொட்டைகளையுடைய அரையினையுமுடைய இருப்பையினது, குவி குலைக் கழன்ற - குவிந்த குலையினின்றும் கழன்ற, ஆலி ஒப்பின் தூம்பு உடைத் திரள் வீ - பனிக்கட்டி போலும் உட்டுளை யினையுடைய திரண்ட பூக்களை, ஆறு செல் வம்பலர் மீள் இடை அழுங்க - வழிச் செல்லும் புதியர் அந்நீண்ட நெறியிடத்தே அஞ்சிப் போக்கினைத் தவிர, ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் - ஈன்ற கரடிகளின் பெருங் கூட்டம் கவர்ந்துண்ணுகின்ற, சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் - பல சுரங்களையும் கடந்து சென்ற தம் தலைவர் பொருட்டுத் தலைவியர் இரங்குவராதல் இயல்பென்று நினையாராய்,

கக-௨, கௌவை மேலவர் ஆகி - அலர் தூற்றலே விரும்புவாராகி, இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ -. இவ்வூரி


(பாடம்) 1. பசந்த, பசந்தது. 2. சுரம்பல கழிந்தோர்.