பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96]

களிற்றியானை நிரை

௨௦௩/203


கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒண்தொடி யாயத் துள்ளுநீ நயந்து
க௦) கொண்டனை யென்பவோர் குறுமகள் அதுவே

செம்பொற் சிலம்பின் செறிந்த குறங்கின்
அங்கலுழ் மாமை 1யஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்
வெண்ணெல் வைப்பிற் பருவூர்ப் பறந்தலை
கரு) இருபெரு வேந்தரும் 2பொருதுகளத் தொழிய

ஒளிறுவாள் நல்லமலர்க் கடந்த ஞான்றைக்
களிறுகவர் கம்பலை போல
அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.

- மருதம் பாடிய இளங்கடுங்கோ .

(சொ - ள்.) க-அ. நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து - கள்ளுண்ட கலம் கழுவப்படுதலின் (அந்நீரையுண்ட) இறாமீன் செருக்கி, பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் - பூட்டிய நாண் அற்ற வில் தெறிப்பது போல நெற் கூடுகளின் அடிகளிற் றுள்ளிவிழும் இடமாகிய, பழனப் பொய்கை அடைகரை - மருத நிலத்துப் பொய்கையின் அடைகரையிலுள்ள, பிரம்பின் அர வாய் அன்ன அம்முள் நெடுங் கொடி - பிரம்பினது அரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடி, அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி - நீர்க் குறைவற்ற ஆம்பலது அகன்ற இலையினைச் சுற்றிட (அவ்விலையை ), அசை வரல் வாடை தூக்கலின் - அசைந்துவரும் வாடைக்காற்று (விட்டு விட்டுப் புகுந்து) அசைத்தலின், ஊது உலை விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் - (அவ் விலை) ஊதப்பெறும் கொல்லன் உலைக்களத்து விசைத்து இழுத்து விடும் துருத்தியைப் போலப் புடைத்துச் சுருங்கும், கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர - வயல்களையும் தோட்டங்களை யுமுடைய காஞ்சி மரங்கள் மிக்க ஊரையுடைய தலைவனே !

௯-க0. ஒண்தொடி ஆயத்துள்ளும் - ஒள்ளிய தொடியினையுடைய பரத்தையர் கூட்டத்தினுள்ளும், நீ ஓர் குறுமகள் நயந்து கொண்டனை என்ப - நீ ஒரு இளைய மகளை விரும்பி மணந்தனை என்று ஊரார் கூறுவாராயினர்;

க0-அ. அதுவே - அக் கூற்று, செம்பொன் சிலம்பின் - சிவந்த பொன்னாலாய சிலம்பினையும், செறிந்த குறங்கின் - நெருங்கிய துடையினையும், அம் கலுழ் மாமை - அழகு ஒழுகும் மாமை நிறத் தினையும் உடைய, அஃதை தந்தை - அஃதை என்பாட்குத் தந்தையராகிய, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் - பெருமை தங்கிய யானையையும் வெல்லும் போரினையுமுடைய சோழர், வெண்ணெல் வைப்பில் பருவூர்ப் பறந்தலை - வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர்ப் போர்க்களத்தே, இரு பெரு வேந்தரும் பொருது


பாடம்) 1. அகுதை. 2. ஒருகளத் தொழிய.