பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

களிற்றியானை நிரை

௨௦௯/209


அ- க0. முதுவாய் பொய் வல் பெண்டிர் - முதுமை வாய்ந்த பொய் கூறல் வல்ல கட்டுவிச்சியராய பெண்டிர், பிரப்பு உளர்பு இரீஇ - பிரப்பரிசியைப் பரப்பி வைத்து, முருகன் ஆர் அணங்கு என் றலின் - இது முருகனது செயலான் வந்த அரிய வருத்தம் என்று கூறலின், அது செத்து - அதனை வாய்மையாகக் கருதி,

கக-௩. ஓவத்து அன்ன வினை புனை நல் இல் - ஓவியத்தை யொத்த புனைந்த தொழிற்றிறங்களையுடைய நல்ல மனையில், பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் - பாவையைப்போன்ற பலராலும் ஆராயப்பெறும் மாண்புற்ற அழகானது, என் மகட்கு பண்டை யிற் சிறக்க என - என் மகட்கு முன்போற் சிறப்புறுக என்று, பரை இ - தெய்வத்தைப் பரவி,

க௪-ரு. கூடு கொள் இன்னியம் கறங்கக் களன் இழைத்து - இணைந்த பலவாய இனிய இயங்கள் ஒத்து ஒலிக்க வெறியாடும் னை இயற்றி, ஆடு அணி அயர்ந்த அகல் பெரும் பந்தர் - ஆடுதற் கேற்ற அழகு செய்த அகன்ற பெரிய பந்தலிலே,

க௬ - உக. வெண் போழ் கடம்பொடு சூடி - வெள்ளிய பனந் தோட்டினைக் கடப்பமலரொடு சூடி, இன் சீர் ஐது அமை பாணி இரீஇ - இனிய சீர் அழகிதாக அமைந்த தாளத்தொடு பொருத்தி, செல்வன் பெரும் பெயர் ஏத்தி - முருகக் கடவுளின் பெரும் புகழினைத் துதித்து, வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப - வேலன் வெறியாடும் பெரிய களம் அழகு பெற, வல்லோன் பொறி அமை பாவையின் - வல்லோன் ஆட்டும் பொறியமைந்த பாவையைப் போல, தூங்கல் வேண்டின் - ஆடுதலை விரும்பின், என் ஆம்கொல் - என் ஆகுமோ?

உக-ரு. மயங்கிய மையல் பெண்டிர்க்கு - வெறியாடுங் களத்துக் கூடிய மயக்கம் பொருந்திய பெண்டிர்க்கு, நொவ்வலாக ஆடிய பின்னும் - துன்பம் உண்டாக வேலன் ஆடிய பின்னும், வாடிய மேனி - எனது வாடிய மேனி, பண்டையிற் சிறவாதாயின் - முன்பு போலச் சிறந்திடாதாயின், இம் மறை அலர் ஆகாமையோ அரிதே - இக் களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படாதிருத்தல் அரிது : |

உரு. அஃதான்று - அஃதன்றி,

உ௬-௩௦. அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி - நம் தலைவர் உறுவித்த இவ்வல்லலைத் தெரிந்தருளுதலின், வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனின் - மணங்கமழும் நெடுவேள் நம் முன்னை அழகினைத் தந்தருள்வன் எனின், செறிதொடி உற்ற செல்லலும் பிறிதென - நெருங்கிய வளையலை யணிந்த நம் தலைவி உற்ற துன்பமும் பிறிதொன்றானெய்தியது என, கான் கெழு நாடன் கேட்பின் - காடு பொருந்திய நாட்டினையுடைய நம் தலைவன் கேட்டறியின், யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது - யான் உயிர் கொண்டு வாழ்தல் முற்கூறிய அதனினும் அரிது.


14