பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௧௦/210

அகநானூறு

[பாட்டு


(முடிபு) தோழி (நம்) எவ்வம், அன்னை அறிந்தனள் அல்லள், வினவலின், பெண்டிர் முருகன் ஆரணங்கு என்றலின், அது செத்து, (முருகற்) பரைஇ ஆடணி அயர்ந்த பந்தர், வேலன் பாவையிற் றூங்கல் வேண்டின் என் ஆம் கொல்? ஆடிய பின்னும் வாடிய மேனி சிறவாதாயின், மறை அலராகாமை அரிது ; அஃதான்று, நெடுவேள் நல்குவன் எனின், செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின், யான் உயிர் வாழ்தல் அதனினும் அரிது.

(வி - ரை.) உவந்த - உவந்து அளி செய்த. ஆக, காரணப் பொருட்டாயது. நல்கல் எவ்வம் - தலைவன் அருளால் வந்த எவ்வம் எனத் தானுற்ற நோய்க்குப் பெயர் கூறினாள். அல்லள் என்பதனை எச்சமாக்குக. முதுவாய் - பேசி முதிர்ந்த வாய் என்றலுமாம். முது வாய்ப் பெண்டிராவார் கட்டுவிச்சியர்; கட்டுக் கூறுபவர். கட்டாவது, முறத்தில் நெல்லையிட்டுக் குறி சொல்லுதல். பிரப்பு - அரிசி, தினை முதலியவற்றைப் பல பகுதியாகக் கூடையிலாதல், முறத்திலாதல் பலியாக இட்டு வைத்தல். 'பல்பிரப்பிரீஇ யென 'என (உ௪உ) இந்நூலுள்ளும், 1'தினைப் பிரப்பிரீஇ' எனக் குறுந்தொகையிலும், 2'குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி, சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇ' எனத் திருமுருகாற்றுப்படையிலும் வருதல் காண்க. வெண் போழ் - போழப்பட்ட பனந்தோடு ; ஆகு பெயர். சீர் - தாள அறுதி. செல்வன் - முருகன். பெரும் பெயர் . பெரிய திரு நாமமும் ஆம். அஃதாவது, முருகனுக்குரிய ஆறெழுத் தருமறை. வேலன் - செவ்வேளின் வேலை ஏந்தி நின்றாடுபவன் ; பூசாரி. பொறி - இயந்திரம். வல்லோன் இயற்றிய பொறி என்க; வல்லோன் ஆட்டும் பாவை யெனினும் பொருந்தும். நொவ்வல் - நோவல். ஆகாமை அரிது, ஆகும் என்றபடி. அஃதான்று : 3'இன்றி யென்னும் வினையெஞ்சிறுதி' என்னும் சூத்திரத்து, 'தொன்றியல் மருங்கின்' என்றதனால், அன்றி என்பது அன்று என ஆயிற்று எனவும், 4'அன்று வருகாலை ஆவாகுதலும்' என்றதனால் ஆன்று என ஆயிற்று எனவும் கொள்க. கண்டருளி - கண்டு அருள் செய்து என்றுரைத்தலுமாம். வெறி - முருகனுக்கு இயல்பாய நறுமணம். 5'மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி' என்றார் நக்கீரனாரும். இனி வெறியாடும் களத்துப் போதரலின் அந் நாற்றம் கமழும் என் றலுமாம். செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் . . . அரிது என்றது, தனது உண்மைக்காதலுக்கு இழுக்கு உண்டாதல் கருதி என்க. இச் செய்யுள் தலைவி கூற்றாதற்கே பெரிதும் பொருந்தியதாம். நச்சினார்க்கினியரும் இக் கருத்தினரே யென்பது 6'களவலராயினும்' என்னுஞ் சூத்திர வுரையாற் பெறப்படும். தோழி கூற்றாயின் தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், யான் எனக் கூறினாள் எனல் வேண்டும்.




1. குறுந். உ௬௩. 2. முருகு. உ௩௩-௪. 3. தொல். எழுத். உ௩எ, 4. தொல். எழுத். உருஅ. 5. முருகு, உ௬௦. 6. தொல். பொருள். க௬.உ௬.