பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௧௪/214

அகநானூறு

[பாட்டு


(முடிபு) தலைவ நீ எல்லினில் வந்து பெயர்தல் எமக்கும் இனிது ; ஆயினும், மீன் கொள்பவர் இருங்கடல் மடுத்த ஒண்சுடர் வேந்தன் பாசறை யானையின் ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் பெரியன் புறந்தை முன்றுறை நாரை இனன் ஒலித்தன்ன அம்பல் எம் அழுங்கல் ஊர் வாய்த்தன.

(வி - ரை.) எனக்குமார் : உம்மை எச்சப் பொருட்டு; மார் அசை. உ.வமைக்கண் யானை முகத்தசைத்த ஓடை யென்றமையால், பொருளிலும் அதற்கேற்ப, கடல்மடுத்த அம்பியிற் பிணித்த சுடர் என வருவித்துரைக்க. 'பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்' என்றது, பாடுவார் பொருள் வேட்டுப் பிறரிடம் செல்லாவாறு மிகுதியாக வழங்குபவன் என்றபடியாம். புன்னையில் நாரை யிருக்கு மென்பதும், வம்ப நாரை யென்னும் வழக்கும், 1'நின்ற புன்னை நிலந் தோய் படுசினை, வம்ப நாரை சேக்கும்' என்னுஞ் செய்யுளுள்ளுங் காண்க. புறந்தை - புறையாறு என்பதன் மரூஉ ; இது பொறையாறு எனவும் வழங்கும். 2'நறவுமகி ழிருக்கை நற்றேர்ப் பெரியன், கட்கமழ் பொறையாற் றன்ன' என்பது காண்க. வாய்த்த, முற்றுவினை. தெய்ய, அசை. 3'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்' என்ற சூத்திரத்து ஒன்றென முடித்தலால், பிற கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க என்றலின், மருதத்து விலங்காகிய எருமையும், சிறுபொழுதாகிய வைகறையும் நெய்தற்கண் வந்தன.



101. பாலை


[பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. தோழி கிழத்திக்குச் சொல்லிய தூஉமாம்.]


அம்ம வாழி தோழி யிம்மை
நன்றுசெய் மருங்கில் தீதில் என்னும்
தொன்றுபடு பழமொழி யின்றுபொய்த் தன்றுகொல்
தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த
௫) சுவன்மாய் பித்தைச் செங்கண் மழவர்
 
வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்
தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி
நுரைதெரி மத்தங் கொளீஇ நிரைப்புறத்
தடிபுதை தொடுதோல் பறைய வேகிக்
க0) கடிபுலங் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர் -

இனந்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்
டகலிரு விசும்பிற் கோடம் போலப்
பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்
றுருப்பவிர் 4பூரிய சுழன்றுவரு கோடைப்
கரு) புன்கால் முருங்கை ஊழ்கழி பன்மலர்


1, குறு, உ௩௬, 2. நற். க௩க. 3. தொல் அகத். க௬. (பாடம்) 4. உளரிய,