பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௧௮/218

அகநானூறு

[பாட்டு

சொல் அளைஇப் பெயர்ந்தனன் ; இன்று அவன் நல்காமையின், அம்பல் ஆக, நுதலிடத்துப் பசப்பினை எவன்கொல் கண்டிகும்?

(வி - ரை.) உளைமான் - பிடரி மயிரினையுடைய விலங்கு, சிங்கம். பிழி - கள், பிழியப்படுவது என்னும் பொருட்டு. பாட - பாடுதலால். பாடுதலாற் கொள்ளாது பெயராது உறங்கும் என்க. தார்-மார்பிற் சூடுவது, கண்ணி - தலையிற் சூடுவது. அறிதல் ஓம்பி - அறியாதபடி பாதுகாத்து. மற்று, வினை மாற்று. அம்பல் ஆகி - அம்பல் ஆக எனத் திரிக்க. உவக்கும் பண்பின் ஓதி என்க ; நுதல் என்றலுமாம். இனி ஓதி என்பதனை ஆகுபெயராகக் கொண்டு, தோழி, ஓதி என விளியாக்கலுமாம். இன்று ஒரு நாள் அருள் செய்யாமையால், நெற்றியில் பசப்பு உண்டாயது என்னை என்றபடி.

(உ - றை:) கொடிச்சி, கானவனுக்கு இன்பம் உண்டாகப் பாடிய குறிஞ்சிப் பண், யானையைத் தினையுண்ணாமற் செய்ததன்றி, பசி ஒரு புறம் நலிய, அதனை உறங்கவும் செய்தது போல, அம்பற் பெண்டிர், தாய்க்கு உணர்த்திய அலர், தலைவன் தலைவியை நுகராமற் செய்ததன்றி, வேட்கை ஒருபுறம் நலிய, அவன் வாளாதே புறத்தே அயர்ந்திருக்கவும் செய்தது என்க.

(மே - ள்.) 1'இரவுக்குறியே ..... மனையகம் புகாக் காலையான' என்னுஞ் சூத்திரத்து இச் செய்யுளைக் கூறி, இது மனையகம் புக்கது என் றுரைத்தனர் நச்.



103. பாலை


[தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொற்றது.]


நிழலறு நனந்தலை யெழாலேறு குறித்த
கதிர்த்த சென்னி நுணங்குசெந் நாவின்
விதிர்த்த போலும் அந்நுண் பல்பொறிக்
காமர் சேவல் ஏமஞ் சேப்ப
ரு) முளியரில் புலம்பப் போகி முனாஅது

முரம்படைந் திருந்த மூரி மன்றத்
ததர்பார்த் தல்கும் ஆகெழு சிறுகுடி
உறையுநர் போகிய வோங்குநிலை 2வியன்நகர்
இறைநிழல் ஒருசிறைப் புலம்பயா உயிர்க்கும்
க0) வெம்முனை யருஞ்சுரம் நீந்தித் தம்வயின்

ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்னென
நள்ளென் யாமத் துயவுத்துணை யாக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு


1. தொல். கள. ௪௦. (பாடம்) 2, வியன் மனை,