பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨௬(226)

அகநானூறு

[பாட்டு


க--௩. நீ செலவு அயரக் கேட்டொறும் - நீ உடன்கொண்டு செல்லுதலை விரும்ப அவ்விருப்பினைக் கேட்குந்தொறும், அன்பின் நெஞ்சத்துப் பல நினைந்து - அன்பினையுடைய நெஞ்சத்து (முன்பு நிகழ்ந்த) பலவற்றையும் எண்ணி (அதெனொடு), அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார் - வருத்தத்தைத் தாங்குவ தால் மெலிந்துள என் நெஞ்சத்துள்ள துன்பினை நீக்கும் பொருட்டு,

௪--கஉ. இரும்புலி கருங்கல் வியல் அறை கிடப்பி - பெரிய புலியானது கரிய கற்களையுடைய அகன்ற பாறையில் கிடத்தி, வயிறு தின்று துறந்த ஏற்றுமான் உணங்கல் - வயிறு நிறையத் தின்று விட்டுப் போன மானே ற்றின் காய்ந்த தசையை, நெறி செல் வம்பலர் - வழிச் செல்வோராய புதியர், உவந்தனர் ஆங்கண் - கண்டு மகிழ்ந்தனராய் (அதனை) அவ்விடத்தே, ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு - தழைத்த மூங்கிலின் விளைந்த நெல்லின் அரிசியுடன் ஒருங்கே கூட்டி, ஆனிலைப் பள்ளி அளை பெய்து அட்ட - ஆயர் சேரியிலுள்ள தயிரினைப் பெய்து சமைத்த, வால் நிணம் உருக்கிய வால் வெண் சோறு - வெள்ளிய நிணத்தினை உருகச்செய்த மிக வெள்ளிய சோற்றினை, புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் - புள்ளி பொருந்திய அரையினையுடைய தேக்க மரத்தினது அகன்ற இலையில் வைத்து உண்ணுவதும், கல்லா நீள்மொழிக் கத நாய் வடுகர். கல்வியில்லாத நெடுமொழி கூறும் சினம் மிக்க நாயையுடைய வடுகரது, வல் ஆண் அருமுனை - வலிய ஆண்மை விளங்கும் அரிய போர் முனையாவதுமாகிய சுரத்தினை, நீந்தி - கடந்து சென்று,

க௩-௫. உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து - இடிந்து விழும் மண்ணின் இடையூற்றினை அஞ்சுவதான ஒரே துறையினையுடைய ஓடையிலுள்ள, இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து - இன்னாததாகிய ஏற்றங் கொண்ட நெறியில் வழுக்கி விழுந்து மிக்க முடம்பட்டு, ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு - தன்னந் தனியே ஒழிந்து கிடக்கும் உடல் வலி வாய்ந்த பொறுக்குந் தன்மையுடைய பகட்டினை,

க௬-உக. புல் உளைச் சிறார் - புல்லிய குடுமியினை யுடைய சிறுவர், அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் - அழகிய தளிரையுடைய இருப்பையின் அற்ற வாயினையும் வெள்ளிய துளையினை யுமுடைய பூவை, வில்லின் நீக்கி - வில்லினால் உதிர்த்து, மரை கடிந்து ஊட்டும் - அதனைத் தின்னவரும் மரைமானைத் துரந்து உண்பிக்கும், வரை அகச் சீறூர் - வரையிடத்தேயுள்ள சிறிய ஊர்களில், மாலை இன் துணை ஆகி - மாலைக் காலத்தே நினக்கு இனிய துணையாகித் தங்கி, காலை பசு நனை நறு வீ - காலைப் போதில் புதிய தேனையுடைய நறிய பூக்கள், பரூஉப் பரல் உறைப்ப . பெரிய பாறைக் கற்களில் உதிர்ந்து கிடத்தலான், மண மனை கமழுங் கானம் - மணம் நிகழும் மனை போன்று நாறுங் காட்டில்,

௩. நின்னொடு - நின்னுடன்,

உஉ, வரும் - வாரா நிற்பள்.