பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

களிற்றியானை நிரை

௨௨௯(229)


தலை பை விரிப்பவை போல் காயா மென் சினை தோய நீடி எடுத்த குலைக் காந்தள் என்பதும், கையாடு வட்டில் போலக் காந்தள் மலரை யூதும் தும்பி தோன்றும் என்பதும் இரட்டைக் கிளவியாகிய உவமங்களாம். ஆலி - நீர்க்கட்டி; நீர் என முன் வந்தமையின் ஈண்டுப் பெயர் மாத்திரையாக நின்றது. முகில் குமுறி எமுந்ததைக் கதம்பட்டது என்றார். கோண்மா- சிங்கம் முதலியன ; ஒருவகை விலங்குமாம். என்னை ? 'அச்சப் பொருளாவன . வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை, முள்ளெயிற் றரவே முழங் கழற் செந்தீ, ஈற்றா மதமா ஏக பாதம், கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம் என்று சொல்லப்பட்டன போல்வன' என்றார் பேராசிரியர் ஆகலின். வருதல் - வருதலால் என உருபு விரிக்க. காயாவின் மென் சினைக்கு மஞ்ஞையும், தூக்கிய காந்தட் குலைக்குப் பாம்பு படம் விரித்ததும் உவமம். தும்பிக்கு வட்டு, வண்ணம், வடிவு, தொழில் என்னும் மூன்றும் பற்றிய உவமையாம்.

(உ-றை) கண்டார் விரும்பத்தக்க காந்தட்குலை அஞ்சத்தக்க அர வின் படம் போலும் என்றது, நம்மால் விரும்பத்தக்க தலைவன் வருகை, ஆற்றது தீமையால் நமக்கு அச்சத்தை விளைவிக்கின்றது என்று தலைவன் உணருமாறு தோழி கூறியபடியாம்.

(மே - ள்.) 1'விரவியும் வரூஉம் மரபின வென்ப' என்னும் சூத்திரத்து, 'காயா மென்சினை , .. மலைகிழ வோனே' என்புழி, ஆடுதற் றொழில்பற்றியும், வடிவுபற்றியும், வண்ணம்பற்றியும் (உவமை) வந்தது என்பர் பேரா.



109. பாலை


[இடைச்சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


பல்லிதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்
நரம்பிசைத் தன்ன இன்றீங் கிளவி
நலநல் கொருத்தி இருந்த ஊரே
கோடுழு களிற்றின் தொழுதி யீண்டிக்
ரு) காடுகால் யாத்த நீடுமரச் சோலை

விழைவெளில் ஆடுங் கழைவளர் நனந்தலை
2வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர்
எண்ணுவரம் பறியா உவலிடு பதுக்கைச்
சுரங்கெழு கவலை கோட்பாற் பட்டென
க0) வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்

கைப்பொருள் இல்லை யாயினும் 3மெய்க்கொண்
டின்னுயிர் செகாஅர் விட்டகல் தப்பற்குப்
பெருங்களிற்று மருப்பொடு வரியதள் இறுக்கும்


1. தொல். உவம. உ. (பாடம்) 2. வெந்நுனை. 3. மெய்கட் டின்னுயிர்,