பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

களிற்றியானை நிரை

௨௩௧(231)


அறனில் வேந்தன் என்றது . காட்டினை ஆளும் தலைவனை. குன்றம் பல விலங்கினவாதலின் இத்துணையும் போந்து இனி வறிதே மீளுதல் ஒல்லா தென்றான் என்க.

(மே - ள்.) '1வெறியறி சிறப்பின்' என்னுஞ் சூத்திரத்து அறனில் வேந்த னாளும், வறனுறு குன்றம் பல விலங்கினவே' எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினர் என்றனர் நச்.



110. நெய்தல்


[தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றது.]


அன்னை அறியினும் அறிக அலர்வாய்
அம்மென் சேரி கேட்பினுங் கேட்க
பிறிதொன் றின்மை அறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
ரு) கடுஞ்சூள் தருகுவல் 2நினக்கே கானல்

தொடலை யாயமொடு கடலுடன் ஆடியுஞ்
சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும்
வருந்திய வருத்தம் தீர யாஞ்சிறி
திருந்தன மாக எய்த வந்து
க0) தடமென் பணைத்தோள் மடநல் லீரே

எல்லும் எல்லின் றசைவுமிக உடையேன்
.மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ
எனமொழிந் தனனே ஒருவன் அவற்கண்
கரு) டிறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி

இவைநுமக் கரிய வல்ல இழிந்த
கொழுமீன் வல்சி என்றனம் இழுமென
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா
உ0) நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்

என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால்
ஒழிகோ யானென அழிதகக் கூறி
யான்பெயர் கென்ன நோக்கித் தான்தன்
நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி
உரு) நின்றோன் போலும் 3இன்றுமென் கட்கே.


- போந்தைப் பசலையார்.


(சொ - ள்.) ரு-௬. தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் - மாலை போன்ற ஆயத்தாரோடு கடலில் ஒருங்கு விளையாடி


1. தொல். புறத், ௫. (பாடம்) 2. நினக்கென. 3. என்றுமென் மகட்கே .