௨௩௨(232)
அகநானூறு
[பாட்டு
யும், கானல் சிற்றில் இழைத்தும் - கடற்கரைச் சோலையில் சிறு வீடு கட்டியும், சிறு சோறு குவைஇயும் - சிறு சோற்றை அட்டுக் குவித்தும், வருந்திய வருத்தம் தீர - இங்ஙனம் வருந்திய வருத்தம் நீங்க, யாம் சிறிது இருந்தனமாக - யாம் சிறிது இளைப்பாறி யிருந்தேமாக (அதுபோது),
௯-கச. ஒருவன் எய்த வந்து - ஒரு தலைவன் எம்மிடம் அணுக வந்து, தடமென் பணைத் தோள் மட நல்லீரே - பெரிய மெல்லிய மூங்கில் போலும் தோளினையுடைய மடப்பம் வாய்ந்த நல்லீரே, எல்லும் எல்லின்று - பகலும் ஒளி இழந்தது, அசைவு மிக உடையேன் - தளர்ச்சி மிகவும் உடையேன், மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு யானும் - யானும் மெல்லிய இலைப் பரப்பின் நீயிர் இடும் விருந்துணவினை உண்டு, இக் கல் என் சிறு குடித் தங்கின் எவனோ - இந்தக் கல்லென்ற ஆரவாரமுடைய சிறுகுடியில் தங்கினால் எய்தும் குறை யாது? என மொழிந்தனன் - என்று கூறினன் ;
க௪-எ. அவன் கண்டு இறைஞ்சிய முகத்தெம், அவனைக் கண்டு கவிழ்ந்த முகத்தேமாய், புறம் சேர்பு பொருந்தி - மறைவான இடத்தே சேர்ந்திருந்து, இழும் என - இழுமென்ற மெல்லிய குரலில், இவை நுமக்கு உரிய அல்ல - இவ்வுணவு நமக்கு ஏற்றன அல்ல, இழிந்த கொழுமீன் வல்சி என்றனம் - இழிவாய கொழு மீனாலாய உணவு என்று கூறினேம்: (பின்னர்),
கஅ-உஉ, நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ - நீண்ட கொடிகள் அசையாநிற்கும் நாவாய்கள் தோன்றுவனவற்றை, காணாமோ என - யாம் காண்பேமல்லேமோ என்று கூறி, காலின் சிதையா - எம் சிற்றில் சிறு சோறுகளைக் காலாற் சிதைத்து விட்டு, நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் - அங்கு நில்லாது போய பலருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு - அவன் என்னையே குறித்து நோக்கிய பார்வையொடு, நல் நுதால் ஒழிகோ யான் என அழிதகக் கூறி - நல்ல நெற்றியினை யுடையாளே யான் செல்லுகோ என்று என் நெஞ்சம் அழிந்திடக் கூற,
உ௩-ரு. யான் பெயர்க என்ன - யான் செல்க என்னலும், நோக்கி - (பெயராது என்னை) நோக்கியவனாய், தான் தன் நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி - அவன் தனது நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பற்றிக் கொண்டு, நின்றோன் - நின்றனன், இன்றும் என் கட்குப் போலும் - இன்றும் என் கண் முன் நிற்பது அந்நிலையே போலும்;
க-௫. அன்னை அறியினும் அறிக - இதனை அன்னை அறியினும் அறிவாளாக, அலர் வாய் அ மென் சேரி கேட்பினும் கேட்க - அலர் கூறும் வாயினையுடைய அம் மெல்லிய சேரியினர் கேட்பினும் கேட்டிடுக, பிறிது ஒன்றும் இன்மை அறியக் கூறி - வேறொன்றும் இல்லாமையை நீயறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகார்த்