௨௩௪(234)
அகநானூறு
[பாட்டு
என்னுஞ் சூத்திரத்து, 'எல்லும் ... ஒருவன்' இது எளித்தல் என்றும், அச் சூத்திரத்து, 'பிறிதொன்றின்மை . . , கடுஞ்சூ டருகுவனினக்கே' இது தலைப்பாடு என்றும் கூறுவர் நச்.
1'கண்ணினுஞ் செவியினும்' என்னுஞ் சூத்திரத்து, 'ஒழிகோ யானென அழிதகக் கூறி என்புழி, தலைமகன் மனத்து நிகழ்ந்த அழிவெல்லாம் ஒழிகோ யான் என்ற உரையானே உணர்ந்தமையின் அது செவி யுணர்வு எனப்படும் என்று கூறினர் பேரா.
[தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை யாற்றுவித்தது.]
உள்ளாங் குவத்தல் செல்லார் கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத் தேஎச்சொல் நாணி
வருவர் வாழி தோழி யரச -
யானை கொண்ட துகிற்கொடி போல
ரு) அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர
மழையென மருண்ட மம்மர் பலவுடன்
ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
க0) அத்தக் கேழல் அட்ட நற்கோள்
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பக்
குருதி யாரும் எருவைச் செஞ்செவி
மண்டம ரழுவத் தெல்லிக் கொண்ட
புண்தேர் விளக்கின் தோன்றும்
கரு) விண்தோய் பிறங்கல் மலையிறந் தோரே.
--பாலைபாடிய பெருங்கடுங்கோ.
(சொ - ள்.) ௩. தோழி வாழி -
க-உ. உள்ளாங்கு உவத்தல் செல்லார் - தமக்குப் பொருள் உள்ள அளவிற்கு மகிழ்தலிலராய், கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி - பகைவர் இகழும் நெஞ்சத்துடன் கூறும் அம்பு போலும் சொல்லிற்கு நாணினராய்,
௩-௬. அரச யானை கொண்ட துகிற்கொடி போல - பட்டத்து யானை தன் மீது கொண்ட துகிற்கொடி போல, ஓடைக் குன்றத்து - ஓடை என்னும் குன்றத்துள்ள, அலந்தலை ஞெமையத்து - காய்ந்த தலையினையுடைய ஞெமை மரத்தின் மீது, வலந்த சிலம்பி - பின்னிய சிலம்பியின் கூடானது, கோடையொடு துயல்வர - மேல்காற்றால் அசைய,
1. தொல். மெய். உஎ,