பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

களிற்றியானை நிரை

௨௩௭(237)


சோலை - குளிர்ந்த கரிய சோலையில், எமியம் என்னாய் - யாம் தமி யேம் என்று நினையாயாய், தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே - ஈங்கு வருதலின் நீ தீங்கு செய்தாய் ஆவாய்;

௯-க0. நாள் இடைப்படின் என் தோழி வாழாள் - நீ வாராது ஒருநாள் இடையீடுறினும் என் தோழி உயிர் வாழாள் காண், தோளிடை முயக்கம் நீயும் வெய்யை - அங்ஙனே நாளும் என் தோழியின் தோளின் கண் முயங்குதலை நீயும் விரும்புதலுடையை ;

கக-உ. சான்றோர் கழியக் காதலர் ஆயினும் - சான்றோராவார் மிகக் காதல் கொண்டார் ஆயிடினும், பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் - பழியுடன் கூடி வரும் இன்பினை விரும்பார் ஆகலின்,

க௩. வரையின் எவன்-நீ வரைந்து கொள்ளின் குறையாவது என்னை? ( அங்ஙனம் வரைந்திடின்),

க௪-௬. கணம் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பில் - கூட்டமாகிய கலைமான்கள் தாழ ஒலிக்கும் மிளகு கொடி படர்ந்த மலைச்சாரலில், மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் - எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர், தொன்று இயல் மரபின் மன்றல் அயர - தொன்று தொட்டு வரும் முறைப்படி வதுவை நிகழ்த்திட,

க௭-௯. பெண் கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி - நீ இவளை வரைந்து கொள்ளும் அவ்வொழுக்கத்தினைக் கண்ணார நோக்கி, யாம் நொதுமல் விருந்தினம்போல - யாம் அயலேமாகிய புதியேம் போல, இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் - இவள் புதிய நாணாலாகிய ஒடுக்கத்தினையும் காண்பே மன்றோ.

(முடிபு) அரை நாட் கங்குல் புலி களிறு அட்டுக் குழுமும் சோலையில் ஈங்கு வந்தோய் தீங்கு செய்தனை; நாள் இடைப்படின் என் தோழி வாழாள் ; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; வரையின் எவன்? மன்றல் அயர அப் பெண் கோளொழுக்கத்தை நோக்கி யாம் நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம்.

(வி - ரை.) 'கூரலெண்கின்' என்ற பாடத்திற்கு, வளைந்த உடம்பினையுடைய கரடியின் என்பதே பொருளாகும். அணி - அணிமையுடைய. பிணா என்பது பிண என்றாயது, 1'குறியதனிறுதிச் சினை கெட வுகரம் - அறிய வருதல் செய்யுளு ளுரித்தே' என்னுஞ் சூத்திரத்து, அறிய என்னும் இலேசாற் கொள்ளப்படும். கழியாக் காதலர் என்பது பாடமாயின், நீங்காத காதலையுடையார் என்க. மன்றல் நிகழ்த்தும் தமராவார், இருமுது குரவரும் சான்றோரு முதலாயவர்.

(உ-றை.) கரடியின் கூட்டம் சிதலை செய்த புற்றின் கோட்டினை யுடைத்து, அதிலுள்ள புற்றாம் பழஞ்சோற்றை யுண்டும், மேலும் அதனை


1. தொல். உயிர்மயங். ௩உ.