பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116]

களிற்றியானை நிரை

௨௪௫(245)


116. மருதம்

[தோழி தலைமகனை வாயில் மறுத்தது.)


எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகுஞ் சாகா டளற்றுறின்
ஆய்கரும் படுக்கும் பாய்புனல் ஊர
ரு) பெரிய நாணிலை மன்ற பொரியெனப்

புன்கவிழ் அகன்றுறைப் பொலிய ஒண்ணுதல்
நறுமலர்க் காண்வருங் குறும்பல் கூந்தல்
மாழை நோக்கிற் காழியல் வனமுலை
எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு 1நெருநை
க0) வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே

பொய்புறம் 2பொதிந்தியாம் கரப்பவும் கையிகந்து
அலரா கின்றால் தானே மலர்தார்
மையணி யானை மறப்போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை
கரு) உடனியைந் தெழுந்த இருபெரு வேந்தர்

கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி
இரங்கிசை முரசம் ஒழியப் பரந்தவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை
ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே.

--பரணர்.


(சொ - ள்.) க-ரு. எரி அகைந்த அன்ன தாமரை இடையிடை - நெருப்பு கப்பு விட்டெரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையிடையே, செந்நெல் கால் அரிந்து குவித்த வினைஞர் - செந்நெற்றாளை அரிந்து அரி அரியாகப் போகட்ட நெல்லரிவோர், கட்கொண்டு மறுகும் சாகாடு - தங்கட்குக் கள்ளைக் கொண்டு பல காலும் திரியும் வண்டி, அளற்று உறின் - சேற்றிற் பதிந்திடின், ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர - அதனைப் போக்கச் சிறந்த கரும்புகளை அடுக்கி இடைமடுக்கும் பாயும்புனல் வளம் மிக்க ஊரனே, பெரிய நாணிலை மன்ற - உறுதியாக நீ பெரிதும் நாணில்லாதவனாவாய் ;

ரு--க0. பொரி எனப் புன்கு அவிழ் அகல் துறை பொலிய - பொரிபோலப் புன்கம்பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவுற, ஒள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையும், நறுமலர் காண் வரும் குறும்பல் கூந்தல் - நறிய மலர்கள் வேய்ந்த காண்டற்கினிய குறிய பலவாய கூந்தலினையும், மாழை நோக்கின் - மாவடுப் போன்ற கண்ணினையும், காழ் இயல் வன முலை - முத்துவடம் அசையும் அழகிய


(பாடம்) 1. நெருநல். 2. யான் கரப்பவும்.