௨௪௬(246)
அகநானூறு
[பாட்டு
முலையினையும், எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு - நுண்ணிய அழகின் நலத்தினையுமுடைய ஒரு பரத்தையோடு, நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப - நேற்று இடையறாது ஒழுகும் புனலில் விளையாட் டயர்ந்தனை எனப் பலருங் கூறுவர் ;
க0-க. அதுவே - அது தான், பொய்புறம் பொதிந்து யாம் கரப்பவும் - அதனைப் பொய்யென்று புறத்தே மூடி யாம் மறைக்கவும், கையிகந்து - எம்செயலினைக் கடந்து,
கஉ-௯. மலர்தார் - மலர்ந்த பூமாலையினையும், மைஅணி யானை - தலையில் மை அணிந்த யானையினையும் உடைய, மறப்போர்- மறம் பொருந்திய போரில் வல்ல, செழியன் - பாண்டியனது, பொய்யா விழவின் கூடல் பறந்தலை - என்றும் நீங்காத விழவினையுடைய கூடற் போர்க்களத்தில், உடன் இயைந்து எழுந்த இருபெரு வேந்தர் - தம்முள் ஒருங்கு இயைந்து எழுந்த சோழ சேர அரசர்களது, கடல் மருள் பெரும் படை - கடல் போன்ற பெருந்தானைகளை, கலங்கத் தாக்கி - கலங்கும் பரிசு தாக்கி, இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடுபுறம் கண்ட ஞான்றை - ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடக்க அவர் பரந்து ஓடும் புறக்கொடையைக் கண்ட நாளில், ஆடுகொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிது - வெற்றி கொண்ட பெரிய களத்தின்கண் எழுந்த ஆரவாரத்தினும் பெரிதாக,
கஉ. அலர் ஆகின்று - அலராகின்றது.
(முடிபு) பாய் புனலூர! பெரிய நாணிலை மன்ற ; எழில் நலத்தொருத்தி யொடு நெருநை வைகுபுனல் அயர்ந்தனை என்ப; அது யாம் கரப்பவும் கையிகந்து, செழியன் கூடற் பறந்தலை, இருபெரு வேந்தர் பெரும்படை கலங்கத் தாக்கி அவர் புறங்கண்ட ஞான்றை; களத்து எழுந்த ஆர்ப்பினும் பெரிது அலர் ஆகின்று .
(வி-ரை.) ஆய் கரும்பு - மெல்லிய கரும்புமாம். கரும்பு அடுக்கும் என்றது மருத நிலத்தின் வளமிகுதி கூறியபடி. மாழை - இளமை என்றும், அழகென்றுமாம். எழில் நலம் - எழுச்சியும் நலமுமாம். யானைக்கு நெற்றியில் அஞ்சனம் அணிதல் மரபாதலின், மையணி யானையென்றார்.
(உ - றை.) நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்த கள் வண்டியின் ஆழ்ச்சியைப் போக்கற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பதுபோல, நீ இல்லறஞ் செய்தலாய நின் ஒழுக்கத்தினைக் கைவிட்டு, இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்தற்குச் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் என்பது.
(மே - ள்.) 1'கிழவோன் விளையாட் டாங்கு மற்றே' என்னுஞ் சூத்திரத்து, 'எஃகுடை யெழினலத் தொருத்தியொடு . . . அலராகின்றாற் றானே' என்பது, தலைவி பிறர் அலர் கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு என்றும், 2'வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் ' என்னும்
1. தொல். கற். உக, 2. தொல். பொருளி. ௪எ.