பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

களிற்றியானை நிரை

௨௪௭(247)


சூத்திரத்து, 'எரியகைந் தன்ன தாமரை யிடையிடை ... யார்ப்பினும் பெரிதே' என்பதனுள், ' நாணிலை மன்ற' எனத் தோழி கூறி அலராகின் றால் என வெளிப்படக் கிளத்தலின் வழுவாய் அமைந்தது என்றும் கூறி னர் நச்.



117. பாலை


(மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.)


மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்
அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர்வி(னை)
வளங்கெழு திருநகர் புலம்பப் போகி
ரு) வெருவரு கவலை ஆங்கண் அருள்வரக்

கருங்கால் ஓமை யேறி வெண்டலைப்
பருந்துபெடை பயிரும் பாழ்நாட் டாங்கண்
பொலந்தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச்
சிலம்புநக இயலிச் சென்ற என்மகட்கே
க0) சாந்துளர் வணர்குரல் வாரி வகைவகுத்து

யான்போது துணைப்பத் தகரம் மண்ணாள்
தன்னோ ரன்ன தகைவெங் காதலன்
வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச்
சிறுபுறம் புதைய நெறிபுதாழ்ந் தனகொல்
கரு) நெடுங்கால் மாஅத் தூழுறு வெண்பழம்

கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா 1யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீநீர்க் கான்யாற்று அவிரறல் போன்றே.

(சொ - ள்.) க-உ. மெளவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும் - முல்லைப் பூவோடு மலர்ந்த கரிய கொத்தினை யுடைய நொச்சியையும், அவ்வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அழகிய வரி பொருந்திய அல்குலினையுடைய ஆயத்தினையும் நினையாளாயும்,

க0-.க. சாந்து உளர் வணர் குரல் வாரி - மயிர்ச் சாந்து பூசிய வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி, வகை வகுத்து - வகைப் படுத்து, யான் போது துணைப்ப - யான் மலர்களை இணைக்கப்புக, தகரமும் மண்ணாள் - அதற்கு உடன் பட்டுத் தகரமும் பூசிக்கொள்ளாளாயும்,

௩-௪. ஏதிலன் பொய் மொழி நம்பி - பிறனொருவன் பொய்ம் மொழியினை விரும்பி, ஏர் வினை வளம் கெழு திரு நகர் புலம்பப்


(பாடம்) 1. யாணர்ப் பண்ணன்.