பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௪௮(248)

அகநானூறு

[பாட்டு


போகி - அழகிய தொழினலம் வாய்ந்த வளம் பொருந்திய செல்வ மிக்க மாளிகை தனித்தொழியப் புறப்பட்டு,

ரு-௯. வெரு வரு கவலை ஆங்கண் - அஞ்சத்தக்க கவர்த்த நெறிகளாய அவ்விடங்களில், வெண் தலைப் பருந்து - வெள்ளிய தலை யினை யுடைய பருந்து, கருங்கால் ஓமை ஏறி - கரிய அடியினை யுடைய ஓமை மரத்தின் மீதேறி, அருள் வர - இரக்கம் உண்டாக, பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் - தனது பெடையினை அழைக்கும் பாழான நாட்டிடத்தே, பொலம் தொடி தெளிர்ப்ப வீசி - தனது பொற்றொடி யொலிக்கக் கையினை வீசியும், சேவடிச் சிலம்பு நக இயலி - சிவந்த அடியிற் சிலம்புகள் விளங்க உலாவியும், சென்ற என் மகட்கு - போய்விட்ட என் மகளுக்கு,

கஉ-௩. தன் ஓரன்ன தகை வெம் காதலன் - தன்னையே ஒத்த தகைமையையும் விருப்பத்தையுமுடைய காதலனாகிய தலைவன், வெறி கமழ் பன் மலர் புனையப் பின்னுவிட - மணம் கமழும் பல வகை மலர்களை வைத்தணிசெயற்குப் பின்னுதலைச் செய்ய (அவள் கூந்தல்),

கரு --௯. நெடுங் கால் மாஅத்து ஊழ் உறு வெண் பழம் - நெடிய அடியினையுடைய மாமரத்தினது முறையாக முற்றிய வெள்ளிய பழத்தினை, கொடு தாள் யாமை பார்ப்பொடு கவரும் - வளைந்த காலினையுடைய யாமை தன் பார்ப்போடு கவர்ந்துண்ணும், பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் - பொய்கைகள் சூழ்ந்துள்ள என்றும் அறாத புது வருவாய்களையுடைய, வாணன் சிறுகுடி வடாஅது - வாணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கின்கண்ணுள்ள, தீம் நீர்க் கான்யாற்று அவிர் அறல் போன்று - இனிய நீரினையுடைய காட்டாற்றின் விளங்கும் அறல் போன்று,

க௪. சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் - பிடர் மறைய நெறிந்து தொங்குகின்றனவோ. -

(முடிபு) நொச்சியினையும் ஆயத்தினையும் நினையாளாயும், தகரம் மண்ணாளாயும், ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, நகர் புலம்பப் போகி, பாழ் நாட்டாங்கண், வீசியும் இயலியுஞ் சென்ற என் மகட்கு, காதலன் பின்னுவிட, அவள் கூந்தல் வாணன் சிறுகுடி வடாஅது கான்யாற்று அறல் போன்று சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்.

(வி - ரை.) அருள் வர - பெடைக்கு அருள் வர ; கண்டார்க்கு அருள்வர எனலுமாம். கையை வீசி என்க. தன்னோ ரன்ன - அன்பு, ஒழுக்கம் முதலியவற்றால் தன்னை யொத்த.




118. குறிஞ்சி


[செறிப்பறிவுறீஇ இரவும் பகலும் வாரலென்று வரைவு கடாஅயது.]


கறங்குவெள் 1அருவி பிறங்குமலைக் கவாஅன்
தேங்கமழ் இணர வேங்கை சூடித்


(பாடம்) 1. அருவிப் பிறங்கு.